நிலக்கரியில் கலக்கும் அரசியல்!
நெய்வேலி:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி ) 10 சதவீத பங்குகளைதனியாருக்கு விற்கும் விவகாரம், அரசியல் பிரச்சினையாக மாறி வருகிறது.
இப்பிரச்சினையில் அதிமுகவின் தலையீட்டை பெரும்பாலான ஊழியர்கள்எதிர்பார்ப்பதால் திமுகவின் நிலைப்பாடு பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்திலிருந்துதயாரிக்கப்படும் அணல் மின்சாரம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும்புதுவை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாரிடம் விற்க மத்திய அமைச்சரவைசமீபத்தில் தீர்மானித்தது. இதற்கு என்.எல்.சி. நிறுவன தொழிற்சங்கங்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஜூலை 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்குதிக்கவுள்ளன. தற்போது கருப்பு பேட்ஜ் அணிந்தும், வாயில் கூட்டங்கள் நடத்தியும்போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஜூலை 3ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தைமேற்கொள்ளவுள்ளனர். என்.எல்.சி. நிறுவனத்தைப் பொறுத்தவரை அங்கு திமுகசார்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம்தான் (தொ.மு.ச) வலுவான அமைப்பு.
அதேசமயம் மற்ற தொழிற்சங்கங்களுக்கும் ஒரளவு பலம் உள்ளது. மற்ற சங்கங்கள்அனைத்தும் எப்போதுமே தொ.மு.சவுக்கு எதிர்ப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவதுவழக்கம்.
தற்போதைய பங்கு விற்பனைப் பிரச்சினையிலும் தொ.மு.சவுடன் சேராமல் மற்றசங்கங்கள் அனைத்தும் இணைந்து தனியாக போராட்டத்தைத் தொடங்கியுள்ளன.இதற்கு முக்கியக் காரணமாவை அவை கூறுவது, மத்திய அமைச்சரவை எடுத்தமுடிவில் திமுகவுக்கும் பங்கு உண்டு.
திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல்ஒப்புதல் அளித்துள்ளனர். எனவே திமுக இந்த விஷயத்தில் தொழிலாளர்களுக்குசாதகமாக உள்ளதாக கருத முடியாது என்று அவை கூறுகின்றன.
இதனால் இப்பிரச்சினையில் இப்போது அரசியல் புகுந்துள்ளது. திமுக தவிர மற்றஅனைத்துத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அப்போது, இந்தப் பிரச்சினையில் அதிமுகதான் தலையிட்டு, தொழிலாளர்களின்போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும். ஜூலை 3ம் தேதி நடைபெறும்உண்ணாவிரதப் போராட்டத்தை நீங்கள் வந்து தொடங்கி வைக்க வேண்டும் என்றுகோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டாரா என்பது தெரியவில்லை.இருப்பினும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைக்க அவர் வரக் கூடும்எனத் தெரிகிறது.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் என்.எல்.சியில் பணியாற்றும் 19,000அலுவலர்கள், 12,000 தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளதால் மின் உற்பத்திகடுமையாக பாதிக்கப்படக் கூடிய சூழல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அரசியலும் புகுந்துள்ளதால் பிரச்சினை வேறு விதமாக சூடு பிடிக்கும்எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications