3ல் 1பங்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர கிரிக்கெட் சங்கத்திற்கு உத்தரவு!
சென்னை:
சென்னையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டிக்காகவசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தில் 3ல் 1 பங்கு தொகையை ரசிகர்களிடம்திருப்பித் தருமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்குஇடையிலான ஒரு நாள் போட்டிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் கன மழை காரணமாக போட்டி நடைபெறவில்லை.
போட்டி ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட்கட்டணத்தை கிரிக்கெட் சங்கம் திருப்பித் தரும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் கட்டணத்தைத் திருப்பித் தர தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுத்து விட்டது.
இதையடுத்து வழக்கறிஞர்கள் முத்துராமலிங்கம், சந்திரசேகரன் மற்றும் இன்னொருவர்ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்றுநீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஆர்.சுதாகர் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு அளித்தது.
அதன்படி, டிக்கெட்டைத் திருப்பித் தரும் ரசிகர்களுக்கு அந்த டிக்கெட் கட்டணத்தில்3ல் ஒரு பங்கு கட்டணத்தைத் திரும்பத் தர வேண்டும்.
சலுகைக் கட்டணத்தில் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளைக் காட்டுபவர்களுக்கு அந்தசலுகைக் கட்டணம் போக, மீதம் உள்ள தொகையில் 3ல் 1 பங்கு தொகையைத்திருப்பித் தர வேண்டும்.
இந்தப் போட்டியை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் குறிப்பிட்டதொகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பாதுகாப்பு நிதியாக வழங்கியுள்ளது. அந்தப்பணத்தை திருப்பித் தருவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கவேண்டும்.
எதிர்காலத்தில் போட்டிகளை நடத்தும்போது, இதுபோன்ற சூழலில் போட்டிகளைஏற்பாடு செய்யாமல் இந்திய கிரிக்கெட் வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோல போட்டிகள் பாதிக்கப்பட்டால் அல்லது ரத்துசெய்யப்பட்டால், ரசிகர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையை முழுமையாகவோஅல்லது பாதி அளவோ திருப்பி வழங்குவது தொடர்பாக நாடு முழுவதற்கும் ஒரேமாதிரியான திட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் வகுக்க வேண்டும்.
திரும்பப் பெறப்பட்ட டிக்கெட் கட்டணத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குநன்கொடையாகவும் அல்லது சுனாமி நிவாரண நிதி போன்றவற்றிற்கும் வழங்கரசிகர்களுக்கும், தனியார் அமைப்புகளுக்கும் உரிமை உண்டு.
அது அவர்களது விருப்பத்தைப் பொறுத்தது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications