பி.இ. மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொறியியல் கல்லூரிகளில் பி.இ படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலைவளர்க்க பயிற்சி வகுப்பும், பேச்சுத்திறன் பயிற்சி வகுப்பும் இந்த ஆண்டு முதல்வழங்கப்படும் என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் விஸ்வநாதன்கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், உலகம் முழுவதும் மாணவர்கள் போட்டி போட்டுபடிக்கவேண்டிய கட்டாய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. பாடங்களில் அதிகமதிப்பெண்கள் பெற்றாலும் கூட, ஆங்கிலத்தில் சரளமாக விளக்கி கூறும் திறமைஇல்லாவிட்டால் வேலை கிடைக்காது.

எனவே மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றல் திறமையை உலகத் தரத்திற்குஇணையாக வளர்க்க வேண்டும் அதற்காக இதுவரை பிஇ, பிடெக் பட்டபடிப்புகளில்முதல் செமஸ்டர் மட்டும் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

அந்த பயிற்சி 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட உள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படஉள்ளது.

அதேபோல பேச்சுதிறனை வளர்க்கவும் தனி பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.ஆங்கில வகுப்பில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக கம்ப்யூட்டர்ஒதுக்கப்படும்.

கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் பாடத்திட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மாணவர்கள்தலையில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு கம்ப்யூட்டரை ஆன் செய்து அதில்உள்ளதை வாசிக்கவேண்டும்.

சரியாக இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் சரி இல்லை என்று காண்பித்துவிடும்.

சரியாக உச்சரிக்கும் வரை கம்யூட்டர் தப்பு என்று காண்பிக்கும். கல்லூரி முடிந்ததும்நடைபெறும் இந்த பயிற்சி கட்டாயமாகும்.

அதேபோல பேச்சுத்திறனை மேம்படுத்த பயிற்சி வகுப்பில் மாணவர்கள் நேர்கதேர்வுக்கு எவ்வாறு உடை அணிந்து செல்லவேண்டும்.

கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்கவேண்டும் என்பது பற்றி பயிற்றுவிக்கப்படும்.மாணவர்களின் ஆளுமை திறன் மேம்பாடு, தலைமை தாங்கும் பண்பு,மென்பொருள்களை கையாளும் முறை ஆகியவற்றிலும் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சிகள் முதல் 3 வருடங்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவர்களின் ஆராய்ச்சிக்காவும், பயிற்சிக்காகவும், ஐ.பி.எம், பிளக்ஸ்ட்ரானிக்ஸ்,மோட்டோராலா, நோக்கியா ஆகிய பெரிய நிறுவனங்களுடன் அண்ணாபல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் ஆராய்ச்சிபூங்கா ஆகியவை கொண்டுவரப்படும். இதற்காக தனியார் நிறுவனங்களை தலா ரூ. 5கோடி தருமாறு கோரியுள்ளோம்.

இந்த வருடம் ஆராய்ச்சிக்காக ரூ.18 கோடியே 75 லட்சம் நிதி கிடைத்துள்ளது. கடந்தவருடம் ரூ. 5 கோடியே 35 லட்சம் மட்டுமே கிடைத்தது.

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இதுவரை 1,539 மாணவ, மாணவிகள் வேலைக்குதேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக கிண்டி என்ஜினீயரிங்கல்லூரியில் 120 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்போசிஸ் கம்பெனி 596 பேரையும், சி.டி.எஸ் நிறுவனம் 572 பேரையும்,டி.சி.எஸ். நிறுவனம் 221 பேரையும், விப்ரோ நிறுவனம் 94 பேரையும்,பிளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம் 56 பேரையும் தேர்வு செய்துள்ளன.

அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கேம்பஸ் இண்டர்வியூ ஜூலைமாதம் 16ம் தேதி தொடங்குகிறது. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய5 நகரங்களில் இந்த கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற இருக்கிறது என்றார்விஸ்வநாதன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+