தலித்கள் நிலத்தை ஸ்வாகா செய்த சசிகலா?!
சென்னை:
சென்னை அருகே சிறுதாவூர் கிராமத்தில் அண்ணாவால், தலித் மக்களுக்குஇலவசமாக வழங்கப்பட்ட நிலம், அதிமுக ஆட்சி காலத்தில் சசிகலவால்ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்டுத் தர வேண்டும் என்று கோரி முதல்வர்கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி இதுதொடர்பாக கருணாநிதிக்கு அனுப்பியுள்ளகடிதத்தில்,கடந்த 1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது, காஞ்சிபுரம் மாவட்டம்சிறுதாவூர் கிராமத்தில், அக்கிராமத்தைச் சேர்ந்த 20 ஏழை தலித் குடும்பங்களுக்கு தலா2.5 ஏக்கர் வீதம் 50 ஏக்கர் விவசாய நிலமும், அதே பகுதியில் தலா 10 சென்ட் வீதம் 2ஏக்கர் நிலமும் இலவசமாக வழங்கப்பட்டது.
தங்களுக்கு வழங்கப்பட்ட விவசாய நிலத்தில் கிணறு தோண்டி விவசாயம் செய்துவந்த தலித் மக்கள், பின்னர் ஏற்பட்ட தொடர் வறட்சி மற்றும் தொடர் வெள்ளம்காரணமாக பயிரிட முடியாமல் நிறுத்தி விட்டனர்.
இந்த நிலத்திற்கு அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலிலதா- அவரது தோழிசசிகலாவுக்கு சொந்தமான ஆடம்பர பங்களாவும், தோட்டமும் உள்ளது.
இந் நிலையி"ல 1991ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நிலத்தில் பயிர் செய்ய தலித்மக்கள முயன்றபோது அதை சசிகலாவின் ஆட்கள் தடுத்து நிறுத்தினர். பயிர் செய்யக்கூடாது என்றும் மிரட்டினர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், தாசில்தார் உள்ளிட்டோரிடம் தலித்கள் புகார்கொடுத்தனர். அப்போது தாசில்தார் அவர்களிடம், இந்த நிலம் இப்போது உங்களதுபெயரில் இல்லை. வேறு பெயரில் பட்டா மாற்றப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.இதனால் விவசாயிகள் அதிர்ந்து போய்விட்டனர்.
அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ஏழை தலித் விவசாயிகளுக்கு அண்ணா வழங்கியஅந்த நிலத்தை தனது நிலத்துடன் சேர்த்து விட்டார் சசிகலா. இந்த நிலம் சசிகலாபெயரில்தான் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை சசிகலாவிடம் இழந்து தவிக்கும் ஏழை தலித்துகளுக்கு அவர்களதுநிலத்தை மீட்டுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலித் மக்களின் நிலத்தை சசிகலா பெயருக்கு மாற்ற உதவிய அதிகாரிகளைக்கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில்கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications