திருச்சி தொழில் அதிபர் மகன் கடத்தல்: கடை ஊழியர்கள் 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

பள்ளியில் இருந்து ஆட்டோவில் வந்து வீடு அருகே இறங்கிய மாணவனை கடந்தி சென்ற 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

திருச்சியைச் சேர்ந்த ரிவன் ஆதில் (13) கடந்த 4ம் தேதி பள்ளி சென்றவன் வீடு திரும்பவில்லை. இதையடுத்துஅவனது பெற்றோர் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந் நிலையில் ஆதிலின் பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவன், உங்கள் மகன் உயிரோடுவேண்டுமானால் 3 லட்சம் பணத்தை தர வேண்டும் என மிரட்டினார்.

அந்த போன் அழைப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பப்ளிக் பூத்தில் இருந்து வந்தது.இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தேடும் பணியில் இறங்கினர்.

இதற்கிடையில் நேற்று மாலை மாணவன் ரிவன் ஆதிலிடம் இருந்து அவனது தந்தை முகமது ஜபருல்லாவுக்குபோன் வந்தது. தான் மத்திய பஸ் நிலையத்தில் நிற்பதாக அவன் கூறினான். உடனே முகமது ஜபருல்லா சென்றுதனது மகனை அழைத்து வந்தார். இதுபற்றி எடமமைப்பட்டி புதூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் ஆதிலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவன்,

தன்னை அடையாளம் தெரியாத சிலர் வேனில் கடத்தி சென்றனர். பின்பு எனக்கு ரூ. 50 கொடுத்து சாலைஒரத்தில் விட்டுவிட்டு சென்று விட்டார்கள். அந்த இடம் எது என்று எனக்கு தெரியாததால், திருச்சி பஸ்சில் ஏறிமத்திய பஸ் நிலையம் வந்து தனது தந்தைக்கு போன் செய்ததாக கூறினான்.

இதற்கிடையில் மாணவனின் கடத்தல் தொடர்பாக 3 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களில் ஒருவன் பெயர்கிருஷ்ணன். திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்தவன். கிருஷ்ணன் இந்த 3 பேருமே முகமது ஜபருல்லாவின்கடையில் வேலை பார்த்து வந்தவர்கள். பணத்துக்காக ரிவனை கடத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இவர்கள் ரிவனை தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த விவரமும்தெரிய வந்ததால் அந்த வீட்டின் உரிமையாளரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கடத்தலுக்குபயன்படுத்திய வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+