மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு, பிளஸ் 2மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை
சென்னை:
மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான்மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றுகோரியும் ஜோலார்பேட்டையை சேர்ந்த மாணவர் நிக்கின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குதாக்கல் செய்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏபி.ஷா, நீதிபதி டி.முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்தது. இந்தவழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
மருத்துவ கல்லூரிகளுக்கு பிளஸ் 2 மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல்தயாரித்து மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு 1984ல் கொள்கை முடிவெடுத்தது.
இது அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு முரணானது என்று கூற முடியாது. கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறையை தற்போது திடீரென மாற்றுவதுநியாயமற்றது என கருதுகிறோம்.
கடந்தாண்டு மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியதால் அதிக மதிப்பெண் பெற்றிருப்பார்கள்.இந்த ஆண்டில் புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பார்கள்.
எனவே நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று மனுதாரர்கூறுவதை ஏற்க முடியாது. மேலும் அட்வகேட் ஜெனரல் 2 பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதன்படி பார்க்கும் போது நுழைவுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் 42 மாணவர்கள் மட்டுமேபயன்பெறுகிறார்கள். பெரும்பாலோருக்கு பாதிப்பு ஏற்படுவதால், நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டும்மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். நுழைவுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 மார்க் அடிப்படையில் தான்மாணவர்களை சேர்க்க வேண்டும் எனறு தீர்ப்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications