கள்ள தொடர்பு நடிகை நிர்மலா தப்பியோட்டம்வீட்டில் போலீஸ் சோதனை
சென்னை:
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மருமகள்மதுதேவி தற்கொலை செய்து கொண்டுள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிவிநடிகை நிர்மலா தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் தேடிவருகின்றனர்.மனோகரனின் மகன் நவீன்குமாருக்கும், டிவி நடிகை நிர்மலாவுக்கும் இடையேகள்ளத் தொடர்பு இருந்ததால் தான் மதுதேவி தற்கொலை செய்து கொண்டார்.
![]() |
இந்த செய்திக்கு எனது பதில் நோ-கமெண்ட்ஸ் தான். காரணம், அந்த செய்தியில்உண்மையில்லை. இதனால் தான் எந்த டென்சனும் இல்லாமல் என்னால்படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிகிறது என்று கூறிவிட்டு காரில் ஏறிக் கிளம்பினார்நிர்மலா.
யார் இந்த நிர்மலா?:
இவர் புத்தம்புது பயணம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர். நடிகை ரேவதிதயாரித்த இந்தப் படத்தில் வினீத்துக்கு ஜோடியாக நடித்தார்.
இதைத் தொடர்ந்து நிர்மலாவுக்கு அதிக வாய்ப்புக்கள் வரவில்லை. இதனால் டிவிக்குத்தாவிவிட்டார்.
மேலும் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் அண்ணன் மகள் தான் இந்த நிர்மலா. அவரதுகுடும்பம் அடையாறில் வசிக்கிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிர்மலா,டிவி சீரியல்களில் நடிப்பதை அவரது குடும்பத்தில் விரும்பவில்லையாம்.
![]() |
ஆனால், தனது கள்ளக் காதல் பரிசாக நிர்மலாவுக்கு நகைகள், பணத்தை வாரித்தந்தேன் என துணைவேந்தரின மகன் நவீன்குமார் போலீசாரிடம் வாக்குமூலம்தந்துள்ளார்.
நவீன்குமாரை மதுதேவி மணம் முடித்தபோது வரதட்சணையாக 500 பவுன் நகையும்,ரூ. 65 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்துள்ளது மதுதேவியின் குடும்பம்.
இதில் சுமார் 100 பவுன் நகைகளை நடிகை நிர்மலாவிடம் கொடுத்திருக்கிறார்நவீன்குமார் என மதுதேவியின் சகோதரர் கணேஷ்பாபு புகார் கூறியிருந்தார். இந்தகள்ளத் தொடர்பால் தான் தனது சகோதரி தற்கொலை செய்து கொண்டதாகவும்கூறியிருந்தார்.
![]() |
நான் நடிகை நிர்மலாவின் அழகில் மயங்கினேன். அவருடன் 4 ஆண்டுகளாகதொடர்பு வைத்து, இன்பத்தில் விழுந்து கிடந்ேதன். அவருடன் கொடைக்கானல்,ஊட்டி என சுற்றியுள்ளேன்.
எனக்கும் நிர்மலாவுக்கும் இருந்த தொடர்பு மதுதேவிக்கும் தெரியும். நான் செக்ஸ்அனுபவிப்பதில் வித்தியாசமானவன். என் மவிைை மதுதேவி எனக்கு சரியாகஒத்துழைக்கவில்லை.
![]() |
ஆனால், மதுதேவி தற்கொலை செய்வார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.அது எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று புட்டு புட்டு வைத்துள்ளார்நவீன் குமார்.
மாஜி துணை வேந்தருக்கு வலை:
இதற்கிடைய மதுதேவியை மேலும் வரதட்சணை வாங்கி வரச் சொல்லிபி.டி.மனோகரன் குடும்பமே கொடுமைப்படுத்தியதாக அவரது சகோதரர் குற்றம்சாட்டியுள்ளதால், மனோகரனை கைது செய்ய போலீசார் முயன்றனர்.
![]() |
மதுதேவி கடிதம் சிக்கியது:
இதற்கிடையே தற்கொலைக்கு முன் மதுதேவி எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம்சிக்கியுள்ளது. அதில், என் சாவுக்கு மாமனார், மாமியார் கனகவல்லி, நாத்தனார் உமா,கணவர் மவீன் குமார் ஆகியோர் தான் காரணம்.
என் கணவர் நடிகை நிர்மலாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னைகொடுமைப்படுத்தினார் என்று எழுதியுள்ளார்.
நிர்மலா வீட்டில் ரெய்ட்:
இந் நிலையில் நடிகை நிர்மலாவை விசாரிக்க இன்று காலை சங்கர நாராயணன், கீதாஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர்.ஆனால், அவர் அதிகாலையிலேயே தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து அவரது வீட்டை சோதனையிட்ட போலீசார் நகைகளை பறிமுதல்செய்ததாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து சென்னையில் பல இடங்களிலும் உள்ள நிர்மலாவின் தோழிகள்,உறவினர்களின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், நிர்மலாசிக்கவில்லை. அவரை கைது செய்ய வலை வீசப்பட்டுள்ளது.

















Click it and Unblock the Notifications