ரயில்வே இலாகாவுக்காக தனி டிவி சேனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரயில்வே இலாகாவுக்கு தனியாக டிவி சேனல் ஒன்றை தொடங்க ரயில்வே நிர்வாகம்தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ரயிலின் வருகை, புறப்பாடு, இடவசதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வீட்டில்இருந்தபடியே டிவியைப் பார்த்து தெரிந்துகொள்ள தனியாக டிவி சேனல் ஒன்றைதொடங்க ரயில்வே நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ரயில் பயணிகளுக்காக உலகத் தரத்துக்கு இணையான வசதிகளை செய்து தரவேண்டும் என்ற நோக்கில் இந்தியன் ரயில்வே செயல்பட்டு வருகிறது.

அதன் மூலம் ரயில் பற்றிய அனைத்து தகவல்களையும் பயணிகளின் வீட்டு டிவியில்ஒளிபரப்ப வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் விரும்புகிறார்.

இதற்கான ஆரம்பகட்ட ஆய்வில் ரயில்வே நிர்வாகம் ஈடுப்பட்டுள்ளது. டிவி சேனல்தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த பிறகு பிரபல தனியார் டிவிஆபரேட்டர்களுடன் சேர்ந்து அடுத்த கட்ட ஆலோசனை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

மற்ற டிவி சேனல்களைப் போலவே ரயில்வே டிவி சேனலிலும் நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகும். மெகா சீரியல், செய்தி ஆகியவற்ருடன் ரயில்வேயைப் பற்றிய புதியதகவல்களும் உடனுக்குடன் ஒளிபரப்பப்படும்.

முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம்,ரயில்களில் உள்ள இட வசதிகள் ஆகிய தகவல்கள் ரயில்வே டிவி சேனல் மூலம்ஒளிபரப்பப்படும்.

ரயில்வே டிவி சேனல் புதிய திட்டம் இறுதி செய்யப்பட்ட பிறகு நாடு முழுவதும் ரயில்நிலையங்களில் தற்போது உள்ள டிவி இணைப்புகள் துண்டிக்கப்படும்.

ரயில்வே டிவி சேனல் என்ற நவீன வசதி அறிமுகமாகி விட்டால், ரயில் தாமதமாகும்நேரத்தை அனுசரித்து ரயிலில் வரும் உறவினர்களை அழைத்து வர ரயில்நிலையத்திற்கு போகலாம்.

வீட்டில் இருந்தபடியே ரயிலில் உள்ள இடவசதி பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.நாடு முழுவதும் ரெயிலில் தினசரி பயணம் செய்யும் 1 கோடியே 10 லட்சம்பயணிகளை டிவி சேனல் திட்டம் நிச்சயம் கவரும்.

இதுபோன்ற டிவி சேனலை பஞ்சாப் மாநிலத்தில் நிறுவுவதற்கு தனியார் நிறுவனம்ஒன்று திட்டமிட்டு வருகிறது. ஆனால் நாடு முழுவதும் இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுக்க ரயில்வே அமைச்சகம் விரும்புகிறது.

பயணிகளுக்கு சேவை செய்வதே இந்தியன் ரயில்வேயின் இந்த ஆண்டுகுறிக்கோளாக இருக்கிறது. ரயில்வே டிவி சேனல் தொடங்கிவிட்டால் அதுபயணிகளின் வாழ்க்கை முறையில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+