இத்தாலி 4வது முறையாக உலக சாம்பியன்
பெர்லின்:
4வது முறையாக உலகக் கோப்பைக் கால்பந்து சாம்பியனாகியுள்ளது இத்தாலி.
![]() |
இதில் 3 முறை சாம்பியனான இத்தாலியும், ஒரு முறை சாம்பியன் ஆன பிரான்ஸும்சந்தித்தன. இரு அணிகளும் வலுவான அணிகள் என்பதால் ரசிகர்களிடையே யார்ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாக நிலவியது.
![]() |
ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே பிரான்ஸ் கேப்டன் ஜிடேன்தனக்குக்கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி அழகான கோலைப் போட்டு பிரான்ஸ்ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தார்.
அதிர்ச்சி அடைந்த இத்தாலி வீரர்கள் படு முனைப்பாக விளையாடி 19வது நிமிடத்தில்இந்த கோலை சமன் செய்தனர். ஆண்ட்ரியா பிர்லோ கொடுத்த பந்தை தலையால்முட்டி அழகான கோலாக்கினார் மாட்டரேஸி.
![]() |
ஒரு கட்டத்தில் இத்தாலி வீரர் மாட்டரேஸியை, பிரான்ஸ் கேப்டன் ஜிடேன் மோதித்தள்ளியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜிடேனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் நடுவர் எலிஸாண்டோ. இதனால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 1கோல் போட்டிருந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
![]() |
இதில் இத்தாலி அணி தனக்குக் கொடுக்கப்பட்ட ஐந்து வாய்ப்புகளில் 4 கோல்களைஅடித்தனர். பிரான்ஸினால் 2 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 5-3என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையைத்தட்டிப் பறித்தது.
இத்தாலி அணி தொடர்பான செய்திகள்பு 3 முறை (1934, 1938, 1982) சாம்பியன் ஆகியுள்ளது.தற்போது நான்காவது முறையாக சாம்பியன் ஆகி, பிரேசில் அணியின் சாதனையைசமண் செய்துள்ளது.
![]() |
இத்தாலி அணி சாம்பியன் ஆனதை அந்நாட்டு ரசிகர்கள் கோலாகலமாககொண்டாடினர். பெர்லின் நகரில் கூடியிருந்த இத்தாலி ரசிகர்களும் மகிழ்ச்சிஆரவாரத்திலும், கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.

















Click it and Unblock the Notifications