தமிழகம் முழுவதும் உஷார் நிலை!
சென்னை:
மும்பை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய ரயில்கள், வழிபாட்டுத் தலங்கள்,முக்கிய கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இரவு நேர வாகனச் சோதனையும் தீவிரமாக நடந்தது.
மும்பை குண்டிவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக டிஜிபி முகர்ஜியைவரவழைத்து முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். இந்தஆலோசனையின்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படியும்,கண்காணிப்பை அதிகரிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து நேற்று இரவு 8 மணி முதல் வாகனச் சோதனைதீவிரப்படுத்தப்பட்டது. பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திறகுள் வரும்வாகனங்களை தீவிரமாக சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியநெடுஞ்சாலைகளில் போலீஸார் விடிய விடிய ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கியபாலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்துரயில்களிலும் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினர்.ரயில்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் முழுவதும்போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பைமேற்கொண்டுள்ளனர். முக்கிய இடங்களில் ரகசிய கேமராக்கள் மூலம் போலீஸார்கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் மிகபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளை சோதனை செய்த பின்னரே ரயில்நிலையத்திற்குள் போலீஸார் அனுமதிக்கின்றனர்.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலும், சென்னை சென்டிரல்நிலையத்திலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களிலும் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் பெட்டிகளில் மகளிர் போலீஸார்பயணிகளுடன் கூடவே பயணம் செய்கின்றனர்.
மதுரை, ஸ்ரீரங்கம் கோவில்களில் பலத்த பாதுகாப்பு:
மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் திருவானிகோவில் அகிலாண்ட ஈஸ்வரி கோவிலிலும், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலிலும், திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலிலும்பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்க படுகிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய கோபுரமான ஸ்ரீரங்கநாத சுவாமி ராஜகோபுரத்தின் முன்பும், திருச்சி ரயில் நிலைத்திலும், திருச்சி விமான நிலைத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதே போல மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications