பஸ்சில் பயணி மரணம்: பிணத்தை பிளாட்பாரத்தில்போட்டு சென்ற டிரைவர்-கண்டக்டர்!
செங்கல்பட்டு:
சென்னையிலிருந்து சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர்மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது பிணத்தை செங்கல்பட்டு அரசுமருத்துமவமனை முன்புள்ள பிளாட்பாரத்தில் போட்டு விட்டு பேருந்து ஓட்டுனரும்,கண்டக்டரும் பொறுப்பின்றி சென்று விட்டனர்.
தாம்பரத்திலிருந்து திண்டிவனம் சென்று கொண்டிருந்த அந்த பஸ்சில் பயணிஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த நொடியே அவர் மரணமடைந்தார்.அவருக்கு அருகில் இருந்த பயணி இதுகுறித்து ஓட்டுனரிடம் தெரிவித்தார். அப்போதுபேருந்து செங்கல்பட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
இதையடுத்து டிரைவருடன் போய் கிசுகிசுத்தார் அந்த கண்டக்டர். உடனே பஸ்ஸைஅரசு மருத்துவமனையை நோக்கி விட்டார் டிரைவர்.
மருத்துவமனையை நெருங்கியதும், டிரைவரும் கண்டக்டரும் மற்ற பயணிகளுடன்சேர்ந்து பிணத்தை கீழே இறக்கினர்.
ஆனால், மருத்துவமனைக்குள் கொண்டு போகாமல் அந்த பயணியின் பிணத்தைபிளாட்பாரத்திலேயே போட்ட டிரைவரும் கண்டக்டரும், பஸ்ஸைக் கிளப்பிவிட்டனர்.
இதனால் அதிர்ந்து போன பயணிகள் டாக்டர்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம்என்று கூற, எதுக்குய்யா எங்களுக்கு வம்பு என்று கூறியவாரே பஸ்ஸை நகர்த்தவே,வேறு வழியில்லாமல் பயணிகள் பஸ்சில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீண்ட நேரமாக அந்தப் பிணம் கேட்பாரின்றிக் கிடந்துள்ளது. இதைப் பார்த்தபொதுமக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்தப்பிணத்தைக் கைப்பற்றி அவர் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் எடுத்துக் கொண்டுள்ளது.
போலீஸாரிடம் தெரிவிக்காமல், அரசு ஊழியர்களான டிரைவரும் கண்டக்டரும்பிணத்தை சாலையில் போட்டு விட்டுச் சென்றது தொடர்பாக என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி மாநில டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
இறக்கமில்லாத டிரைவருக்கும் கண்டக்டருக்கும் என்ன தண்டனை தருவது?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications