சென்னை-கண்டக்டர் இல்லாமல் ஓடிய டவுன் பஸ்
சென்னை:
நடத்துனரே இல்லாமல் பல 4 கி.மீ தூரம் நகரப் பேருந்து ஓடிய வினோத சம்பவம்சென்னையில் நடந்தது. இதனால் ஏறிய பலரும் டிக்கெட் வாங்காமல், அரசைபாராட்டிக் கொண்டே, இறங்கிச் சென்றனர்.
சென்னை பாரிமுனையிலிருந்து கோயம்பேட்டிற்கு நகரப் பேருந்து ஒன்று கிளம்பியது.வாசு என்பவர் தான் பேருந்தின் ஓட்டுனர். பேருந்தை இயக்கத் தயாராகஉட்கார்ந்திருந்தார் வாசு. அப்போது விசில் சப்தம் கேட்டது. இதையடுத்து பேருந்தைக்கிளப்பினார் வாசு.பேருந்து மெதுவாக போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு நிறுத்தம் வந்தபோதும்பேருந்தை நிறுத்தி, பயணிகளை ஏற்றி போய்க் கொண்டிருந்தார் வாசு. இந்தநிலையில் பேருந்துக்குள் கசமுசவான சத்தம். வாசுவுக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன என்று அவர் பார்த்தபோதுதான் பேருந்தில் நடத்துனரே இல்லை என்பது தெரியவந்தது. அதற்குள் பல ஸ்டாப்களை தாண்டி பாரிமுனையிலிருந்து தாசப்பிரகாஷ்ஹோட்டல் வரைக்கும் வந்து விட்டது பஸ்.
கண்டக்டர் இல்லையே, பிறகு யார் விசில் அடித்தது என்று குழம்பிய அவர்பயணிகளிடம் கேட்டபோது, நடத்துனர் இருக்கையில் அமர்ந்திருந்த சிலமாணவர்கள்தான் விசில் கொடுத்தனர் என்று கூறினர்.
அடப் பாவிகளா என்று கடுப்பாகிப் போன ஓட்டுனர் அந்த மாணவர்களை நோக்கிஓடினார். ஆனால், அவர்கள் இறங்கி ஓடிவிட்டனர்.
இந் நிலையில் பேருந்தைக் காணாமல் குழம்பிய அந்த பேருந்தின் நடத்துனர்பாலசுந்தரம், கண்காணிப்பாளரிடம் போய் நடந்ததைக் கூறினார். இதையடுத்து வாக்கிடாக்கி மூலம் அந்தப் பேருந்தை மடக்க உத்தரவிட்டார் கண்காணிப்பாளர்.
உடனே ஒரு டீம் ஜீப்பில் பேருந்தை தேடிச் சென்றபோது அது தாசப்பிரகாஷ் அருகேநின்று கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
டிரைவரை அந்த டீம் சுற்றி நின்று திட்ட, அவர்களிடம் நடந்த கொடுமையைக் கூறிப்புலம்பினார் வாசு.
இதையடுத்து கண்டக்டர் பாலசுந்தரம் வரவழைக்கப்பட்டு பேருந்து கோயம்பேடுக்குகிளம்பியது.
மாணவ மணிகளே, இப்படியும் திருவிளையாடலா? நாடு தாங்காது சாமிகளா...
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications