லாரி குடவுனில் வெடித்த வெங்காய வெடிகள்!
சென்னை:
லாரியில் பருப்பு மூட்டைகளுக்கு இடையே திருட்டுத்தனமாக கடத்தி வரப்பட்டவெங்காய வெடிகள் வெடித்ததால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள கோடீஸ்வரராவ் என்பவருக்குச் சொந்தமானலாரி குடவுனுக்கு ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து பருப்பு மூட்டைகள் ஏற்றிவரப்பட்டன.நள்ளிரவு 12 மணி அளவில் லாரி குடவுனுக்கு வந்தது. லாரியிலிருந்து பருப்புமூட்டைகளை இறக்கினர். அப்போது ஒரு மூட்டை தவறி விழுந்தது.
இதையடுத்து அந்த மூட்டை பலத்த சப்தத்துடன் சரமாரியாக வெடித்தது. இதனால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.
போலீஸ் படை விரைந்து வந்து லாரியை ஆய்வு செய்தனர். வெடித்த மூட்டையைபரிசோதித்தபோது அதில் வெங்காய வெடிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துலாரியில் இருந்த மற்ற மூட்டைகளை பரிசோதித்தபோது பருப்பு மூட்டைகளுக்குக்கீழே மூட்டை மூட்டையாக வெங்காய வெடிகள் இருந்தன.
மொத்தம் 86 மூட்டை வெங்காய வெடிகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம்ஆகும். லாரி நிறைய வெங்காய வெடிகள் இருந்ததால் போலீஸார் அதிர்ச்சிஅடைந்தனர்.
அனைத்து மூடைகலையும் தீவுத் திடலுக்குக் கொண்டு சென்றனர். அத்தனைமூட்டைகளையும் பத்திரமாக கீழே இறக்கி தண்ணீர் ஊற்றி அவற்றை செயலிழக்கவைத்தனர்.
இந்த வெங்காய வெடிகளை தரையில் போட்டோலோ அல்லது சுவற்றில்எரிந்தாலோதான் வெடிக்கும். பெரும்பாலும் ரவுடிகளும், சமூக விரோதிகளும்தான்இந்த வகை வெங்காய வெடிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
போலீஸார் பிடிக்க வந்தால் தப்புவதற்காகவும், எங்காவது கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்றாலோ இவற்றை பயன்படுத்துவர்.
பருப்பு மூட்டைகளுடன் சேர்த்து இந்த வெங்காய வெடிகள் குண்டூரிலிருந்துகள்ளத்தனமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடவ்ன் உரிமையாளர்கோடீஸ்வரராவ்தான் இதை அனுப்பி வைத்துள்ளார்.
வெங்காய வெடிகளை கடத்தி வந்தது தொடர்பாக லாரி நிறுவன மேலாளர்ராமச்சந்திரன், டிரைவர் ரவி, கிளீனர் ராமு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications