ஜெயமாலா மன்னிப்பு கேட்க வேண்டும்-கேரளா
குருவாயூர்:
சபரிமலை கோவில் தொடர்பாக தான் தெரிவித்த அத்தனை கருத்துக்களுக்காகவும்நடிகை ஜெயமாலா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால்பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவர் மீதுசட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில அறநிலையத்துறைஅமைச்சர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
![]() |
அப்போது, சபரிமலை ஐயப்பன் கோவில் புகழை கெடுக்க சிலர் (கர்நாடகத்தைச்சேர்ந்த ஒரு சாமியார்?) முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் கோவில் வருவாயை முடக்கநினைக்கிறார்கள்.
ஐயப்பன் சிலையைத் தொட்டதாக ஜெயமாலா கூறி வருகிறார். இதுதொடர்பாகதிருவாங்கூர் தேவஸ்தான வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தச் சென்றபோது அவர்ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து குற்றப் பிரிவு விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் இப்போது இரண்டு வழிகள்தான் உள்ளன. இதுவரை தான்பேசியதற்காக ஜெயமாலா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படிச்செய்தால் பிரச்சினையை இத்துடன் விட்டு விடலாம்.
இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.அவரை கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரிப்போம் என்றார் சுதாகரன்.













Click it and Unblock the Notifications