நியூயார்க்கை கலக்கிய வெடிகுண்டு பீதி!
நியூயார்க்:
மும்பையில் நடந்தது போன்ற ரயில் குண்டுவெடிப்புச் சம்பவம் நியூயார்க் நகரிலும்நடக்கும் என்று பரவிய தகவலால் நியூயார்க் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.
மும்பையில் நேற்று மாலை புறநகர் ரயில்களில் குண்டுகள் வெடித்த நிலையில்,நியூயார்க் நகரில் ஒரு தகவல் பரவியது.
அங்குள்ள சுரங்க ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் தீவிரவாதிகள்வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் பரவ நியூயார்க் பீதியில்ஆழ்ந்தது.
![]() |
இதற்கிடையே மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 2 அமெரிக்கர்கள்பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மும்பையில் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் புஷ், ரஷ்ய அதிபர்புடின், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறுகையில், இது மிகவும்கோழைத்தனமான செயல். தீவிரவாதத்தைக் களையவும், நிவாரணப் பணிகளைமேற்கொள்ளவும், விசாரணை ரீதியிலும் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராகஇருக்கிறது.
குண்டுவெடிப்பில் பலியான குடும்பத்தினருக்கு அமெரிக்க மக்கள் சார்பில்அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக என்றார்.
இதற்கிடையே குண்டுவெடிப்பில் தடயவியல் சோதனைகளில் போலீசாருக்கு உதவஎப்.பி.ஐ குழு ஒன்றை அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இன்டலிஜென்ஸ் பீரோவுடன் இணைந்து மும்பை போலீசாருடன் இந்த எப்பிஐ குழுதடயவியல் சோதனை நடத்தவுள்ளது.
இந் நிலையில் குண்டுவெடிப்புகளுக்கு யார் காரணம் என்பது தொடர்பாக சிலதுப்புகள் கிடைத்துள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications