மும்பை குண்டுவெடிப்பு: கோவை கைதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
மும்பையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியான 190 பேருக்கு இரங்கல்தெரிவிக்கும் வகையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொடர்குண்டுவெடிப்புக் கைதிகள் 9 பேர் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இதுதொடர்பாக கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறையில்அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் வழக்கறிர்கள் அக்பர் அலி, அப்துல் ரகுமான்ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மும்பை குண்டு வெடிப்பு சம்பங்களுக்கு கோவை கைதிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர். அப்பாவி உயிர்களைப் பறித்துள்ள செயலை அவர்கள்வன்மையாக கண்டித்துள்ளனர்.
இந்த செயலுக்குப் பின்னணியில் உள்ளவர்களைப் பிடித்து மத்திய அரசு கடுமையாகதண்டிக்க வேண்டும்.
குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், லியாகத் அலி,சிக்கந்தர், உபைதூர் ரஹ்மான், யாகூப், அப்துல் சத்தார், அபுதாகிர், நிவாப் கான், சேட்பக்ருதீன், அஷ்ரப் ஆகியோர் இன்று உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்கள்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications