மும்பை-தேடப்படும் 2 தீவிரவாதிகள்
மும்பை:
மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் இரு குற்றவாளிகளின்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
![]() |
இந்த இருவருமே கடந்த சில மாதங்களாகவே தலைமறைவாக உள்ளனர். குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் சிலமாதங்களுக்கு முன் ஆர்டிஎக்ஸ் வெடி பொருட்களை உளவுப் பிரிவினர் கைப்பற்றினர். இதையடுத்து இந்தஇருவரும் தலைமறைவாகினர்.
இப்போது மும்பை குண்டு வெடிப்பில் இவர்கள் மீதே சந்தேகம் வலுத்துள்ளது. இவர்களைத் தவிர ரகில் என்றடிராவல் ஏஜென்சி நடத்தி வந்த வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட் தயாரிப்பதில் எப்ஸ்பர்ட் இந்த ராகில். மும்பை கிராண்ட் ரோட்டில் ஏஜென்சி நடத்தி வந்தராகிலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் நெருங்கிய தொடர்புள்ளதும் தெரியவந்துள்ளது.
பாக். நடத்திய குண்டுவெடிப்பு:
இதற்கிடையே இந்த குண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா கருதுகிறது. தீவிரவாதிகள்உதவியோடு பாகிஸ்தான் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை அறிக்கைகொடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் மத்திய அரசிடம்பேசியுள்ளார். பாகிஸ்தானின் உதவியோடு தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு உதவ ரெடி-முஷாரப்:
குண்டு வெடிப்பில் தங்கள் மீதே இந்தியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இந்த குண்டு வெடிப்புகள்தொடர்பாக இந்தியா நடத்தும் விசாரணைகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும் அவர்களைமன்னிக்க முடியாது. இது தொடர்பான விசாரணைகளுக்கு நான் அனைத்து உதவிகளையும் செய்யத் தயார். இதில்இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.
மன்மோகன் இன்று மும்பை பயணம்:
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் இன்று மும்பை சென்றார். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களைசந்தித்து ஆறுதல் கூறிய அவர் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பின்புலம் உள்ளது. தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்காத வரைபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் ஏதும் சாத்தியமில்லை என்றார்.
இதன் மூலம் அடுத்தவாரம் நடக்கவிருந்த இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் ரத்தாகின்றன.
கலங்கடிக்கும் புரளிகள்:
மும்பையிலிருந்து இன்று புத் கயா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் இது வெறும் புரளி என பின்னர் தெரிய வந்தது.
இன்று காலை மும்பையிலிருந்து பீகார் மாநிலம் புத் கயாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பாந்த்ரா ரயில் நிலையஅதிகாரிக்கு தொலைபேசி தகவல் வந்தது.
இதையடுத்து புத்கயா எக்ஸ்பிரஸ் ரயில் நறுத்தப்பட்டு, அனைத்துப் பெட்டிகளும் சோதனையிடப்பட்டன. வெடிகுண்டு மிரட்டல் குறித்து அறிந்த பயணிகள் பலர்தங்களது பயணத்தை கைவிட்டு விட்டு அவசர அவசரமாக ரயில் நிலையத்திலிருந்து வெளியேறினர்.
ஆனால், அந்த ரயிலில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதேபோல மும்பையில் உள்ள வேறு சில ரயில் நிலையங்களிலும் கூட இதேபோல வெடிகுண்டு புரளி இன்று பயணிகளிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை













Click it and Unblock the Notifications