குண்டுவெடிப்பு: அனாதையான குழந்தைகளுக்கு உதவும் மதரசாக்கள்
பெங்களூர்:
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குடும்பத்தை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட குழந்தைகளுக்குஉதவ கர்நாடக மதரசாக்கள் சங்கம் முன் வந்துள்ளது.
கர்நாடக மதரசாக்கள் சங்கமான அன்ஜுமன்-இ-மதரிஸ் அமைப்பின் கூட்டம் பெங்களூரில் நடந்தது. இக்கூட்டத்தில் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.கூட்டத்திற்குப் பின்னர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மெளலானா முகம்மது அன்வர் ரஷீதி வெளியிட்டஅறிக்கையில், இதுபோன்ற ஈவு இரக்கமற்ற காரியத்தில் ஈடுபடுபவர்களை மன்னிக்கக் கூடாது. இந்தசம்பவத்திற்குக் காரணமானவர்களைப் பிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு போதிய உதவிகளை மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் செய்யவேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் உற்றார், உறவினரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டகுழந்தைகளுக்கு நிதியுதவி செய்ய கர்நாடக மதரசாக்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அந்தக் குழந்தைகள் எந்த மதம் என்ற பாரபட்சம் பார்க்காமல் அத்தனை பேருக்கும் நிதியுதவியும், பிறஉதவிகளும் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் ரஷீதி.
தங்களது அமைப்பின் முடிவை தெரிவிப்பதற்காக மும்பைக்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அமைப்பின்தலைவர் இத்ரீஸ் ஹப்பன் ரஹிமி தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications