இந்தியா கேட் பகுதியில் வெடிகுண்டு புரளி
மும்பை:
மும்பை புறநகர் ரயில்களில் நடந்த வெடிகுண்டுச் சம்பவம் தொடர்பாக இன்று காலை 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் கடந்த 11ம் தேதி மாலை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 200 பேர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் சிமிஅமைப்புதான் முக்கிய மூளையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.மும்பை ரயில்களில் குண்டு வைத்தவர்கள் என்று சந்தேகப்படும் 2 பேரின் புகைப்படங்களை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
சிமி அமைப்பு தவிர வேறு சில அமைப்புகளுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை மேற்கு மாஹிம் பகுதியில் போலீஸார் அதிரடி வேட்டை நடத்தி 300 பேரைப் பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபின்னர் 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி மும்பை குண்டுவெடிப்பில்மேலும் 2 அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அதில் ஒரு அமைப்பின் பெயர் குஜராத் பழிதீர்க்கும் படை என்பதாகும். குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த வன்முறைக்குப் பழிவாங்கும்வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த அமைப்பு படு ரகசியமாக இயங்கி வருவது தெரிய வந்துள்ளது. இந்த குஜராத் பழி தீர்க்கும் படையும், சிமிஅமைப்பின் இன்னொரு கிளை அமைப்பும் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியா கேட் பகுதியில் வெடிகுண்டு புரளி:
இதற்கிடையே டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று காலை செய்தி பரவியதால் அங்கு பரபரப்புஏற்பட்டது.
உடனடியாக பாதுகாப்புப் படையினர் சென்று தீவிர சோதனை நடத்தியதில் குண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. வெடிகுண்டு புரளியால்,இந்தியா கேட்டைப் பார்வையிட வந்திருந்த சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.
சென்னையில் பாஜக பேரணி:
இதற்கிடையில் மும்பை குண்டுவெடிப்பைக் கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணிக்கு பாஜக மூத்த தலைவர் வெங்கையாநாயுடு தலைமை தாங்கினார்.
அகில இந்திய பொதுச் செயலாளர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டஏராளமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.
மன்ரோ சிலையில் தொடங்கிய பேரணி சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது.
அனாதையான குழந்தைகளுக்கு உதவும் மதரசாக்கள்:
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குடும்பத்தை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட குழந்தைகளுக்குஉதவ கர்நாடக மதரசாக்கள் சங்கம் முன் வந்துள்ளது.
கர்நாடக மதரசாக்கள் சங்கமான அன்ஜுமன்-இ-மதரிஸ் அமைப்பின் கூட்டம் பெங்களூரில் நடந்தது. இக்கூட்டத்தில் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மெளலானா முகம்மது அன்வர் ரஷீதி வெளியிட்டஅறிக்கையில், இதுபோன்ற ஈவு இரக்கமற்ற காரியத்தில் ஈடுபடுபவர்களை மன்னிக்கக் கூடாது. இந்தசம்பவத்திற்குக் காரணமானவர்களைப் பிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு போதிய உதவிகளை மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் செய்யவேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் உற்றார், உறவினரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டகுழந்தைகளுக்கு நிதியுதவி செய்ய கர்நாடக மதரசாக்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அந்தக் குழந்தைகள் எந்த மதம் என்ற பாரபட்சம் பார்க்காமல் அத்தனை பேருக்கும் நிதியுதவியும், பிறஉதவிகளும் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் ரஷீதி.
தங்களது அமைப்பின் முடிவை தெரிவிப்பதற்காக மும்பைக்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அமைப்பின்தலைவர் இத்ரீஸ் ஹப்பன் ரஹிமி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications