முதல் மனைவி வரதட்சணை புகார்: 2வது மனைவியுடன் விஷம் குடித்த கணவர்!
பெரம்பூர்:
முதல் மனைவி வரதட்சணை புகார் கொடுத்ததால், போலீஸ் விசாரணைக்குப் பயந்தஅவரது கணவர் தனது இரண்டாவது மனைவியுடன் விஷம் குடித்தார். இதில் அவர்உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவரது 2வது மனைவி இறந்து விட்டார்.
திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன்சுரேஷ். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கும் திருச்சியைச் சேர்ந்த மீராவுக்கும் 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.திருமணமானது முதல் சுரேஷுக்கும், மீராவுக்கும் இடையே அடிக்கடி தகராறுஏற்பட்டது. இதையடுத்து தனது தாய் பிரேமாவுடன் சென்னையில் தனி வீடு பார்த்துவசித்து வந்தார் சுரேஷ்.
மீரா அவரது தாய் வீட்டில் வசித்தார். இந்த நிலையில் மைதிலி என்ற பெண்ணைசுரேஷ் 2வது திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த மீரா, திருச்சி மகளிர்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில் தன்னை கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தார் ஒதுக்கி வைத்துவிட்டனர். இப்போது 2வது திருமணம் செய்து கொண்டு விட்டார் எனது கணவர் என்றுகூறியிருந்தார்.
இந்தப் புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தில் மீரா வழக்குப் பதிவு செய்தார். வழக்கை விசாரித்தநீதிபதி, உடனடிாயக இதுகுறித்து விசாரிக்குமாறு ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸுக்குஉத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சுரேஷின் பெரியம்மாகமலாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து 2 நாட்கள் வைத்திருந்ததாககூறப்படுகிறது. அங்கு அவரை சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போதுதான் சுரேஷும், பிரேமாவும் விசாரணைக்கு வருவார்கள் என்று போலீஸ்தரப்பில் கமலாவிடம் கூறப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும் சென்னையிலிருந்து சுரேஷ், பிரேமா, மைதிலி ஆகியோர்விசாரணைக்காக சென்னைக்குக் கிளம்பினர். வரும் வழியில் போலீஸார் அடித்துச்சித்திரவதை செய்வார்களோ என்று சுரேஷ் அஞ்சியுள்ளார்.
இதையடுத்து பெரம்பூர் அருகே மங்கலமேடு என்ற இடத்தில் காரை நிறுத்தி 3 பேரும்விஷம் அருந்தினர். காரில் மயங்கிக் கிடந்த அவர்களைப் பார்த்த அக்கம்பக்கத்தினர்உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மைதிலி இறந்தார். சுரேஷும், பிரேமாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில்திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications