துர்நாற்றம் வீசும் ரேசன் அரிசி: கருணாநிதிக்கு சாம்பிள் அனுப்பிய இ.கம்யூ
நாகர்கோவில்:
ரேஷன் கடைகளில் 2 ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசி மிக மோசமான தரத்தில் உள்ளதாக புகார்கள்எழுந்துள்ளன.
இந் நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசின் சாம்பிளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்அனுப்பியுள்ளது.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2 ரூபாய்க்கு கிலோ அரிசியை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் நன்றாக இருந்தஅரிசியின் தரம் குறைந்து கொண்டே வருகிறது.
நாகர்கோவில் பகுதியில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசி துர்நாற்றத்துடன் உள்ளது. மேலும் ஏகப்பட்டவண்டு, பூச்சிககளுடன் கறுப்பு நிற அரிசி நிறைந்து காணப்படுகிறது.
இது குறித்து கருணாநிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில்,
நாகர்கோவில் பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. பெரும்பாலான மக்கள்ரேஷன் அரிசியை நம்பியே உள்ளனர். தற்போது ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் அரிசிதுர்நாற்றத்தோடும், வண்டுகள் மற்றும் கறுப்பு நிற அரிசியுடன் உள்ளது.
இந்த ரேஷன் அரிசியை பொது மக்கள் சாப்பிட முடியாத நிலை உள்ளது. எனவே தற்போதுவினியோகிக்கப்பட்டு வரும் ரேஷன் அரிசியை உடனடியாக மாற்றி நல்ல தரமான அரிசியை வழங்கிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் கடிதத்துடன் முதல்வருக்கு ரேஷன் அரிசியின் சாம்பிளையும் அனுப்பியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட்கட்சி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications