அலைபாயுதே ஸ்டைல் கல்யாணம்-ஜோடி போலீசில் தஞ்சம்
சென்னை:
அலைபாயுதே சினிமா பாணியில் காதலனை திருமணம் செய்து கொண்டு, தாலியை மறைத்து, பெற்றோருடன்வசித்து வந்த கல்லூரி மாணவி, பெற்றோருக்கு விஷயம் தெரிய வந்ததால் காதல் கணவருடன் போலீசாரிடம்தஞ்சமடைந்துள்ளார்.
ஈரோடு அருகில் உள்ள கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (21). இவர் ஈரோட்டில் உள்ள கலைக்கல்லூரியில் பிஎஸ்சி 3 ம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த பிரபாவதி ஈரோட்டில் உள்ள ஒருஇன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு படிக்கிறார்.
இருவரும் காதலித்தனர். இதற்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. காரணம், இருவரும் வேறு ஜாதியினர்.
தங்களை ஏதாவது காரணம் கூறி பெற்றோர் பிரித்து விடுவார்கள் என பயந்த இருவரும், இரண்டு மாதங்களுக்குமுன் ஈரோட்டில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
![]() |
ஒரு மாதமாக தாலியை சுடிதாரிலும், சேலையிலும் மறைத்து கல்லூரிக்குச் சென்று வந்தார் பிரபாவதி. இந்நிலையில் பிரபாவதியின் தாயார் சமீபத்தில் தன் மகள் கழுத்தில் தாலி தொங்குவதை பார்த்து விட்டார்.
அவர் அலறியபடி ஓலமிடவே, அவரை ஒருவழியாக சமாளித்து விட்டு, கல்லூரிக்கு ஓடிய பிரபாவதி,சந்திரசேகரிடம் விஷயத்தை சொன்னார். அன்று மாலை கல்லூரி முடிந்ததும் இருவரும் வீடுகளுக்குப் போகாமல்நாமக்கல்லில் உள்ள சந்திரசேகரின் நண்பர் வீட்டுக்குச் சென்று தங்கினர்.
இருவரும் நாமக்கல்லில் தங்கியிருப்பதை அறிந்த இரு வீட்டாரும் அங்கு வந்தனர். இதையடுத்து பின் பக்கவாசல் வழியாக தப்பிய காதல் ஜோடி அங்கிருந்து சென்னைக்கு பஸ் ஏறியது. அங்கு அம்பத்தூரில் ஒருநண்பரின் வீட்டில் தங்கினர்.
பின்னர் இருவரும் மத்திய சென்னை போலீஸ் இணை கமிஷனரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில்,
ஜாதியை சொல்லி எங்களை பிரிக்க எங்கள் வீட்டினர் திட்டமிட்டதால், நாங்கள் கோயிலில் ரகசிய திருமணம்செய்து கொண்டோம். எங்களை எப்படியும் பிரித்து விடுவது என்று எங்கள் பெற்றோர்கள் தேடுகின்றனர்.தற்போது நாங்கள் அம்பத்தூர் மண்ணூர்ப்பேட்டையில் நண்பன் வீட்டில் தங்கியிருக்கிறோம். எங்கள் உயிருக்குஆபத்து ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தவும் பாதுகாப்பு வழங்கவும் அம்பத்தூர் உதவி கமிஷனருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications