மும்பை குண்டு வெடிப்பு: 3 முக்கிய குற்றவாளிகள் சிக்கினர்
பாட்னா:
மும்பை ரயில் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் 2 பேர் பிகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவன் மகாராஷ்டிரத்தில் கைது செய்யப்பட்டான்.
இன்டெலிஜென்ஸ் பீரோ மற்றும் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்பு போலீசார் இணைந்து நடத்திய ரெய்டில்இவர்கள் சிக்கினர். பிகாரில் சிக்கிய இருவரும் சிறப்பு விமானத்தில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.குண்டுவெடிப்பு தொடர்பாக நூற்றுக்கணக்கானவர்களைப் பிடித்து விசாரித்தும் எந்தவிதமான துப்பும்கிடைக்காமல் தடுமாறி வந்தனர் போலீசார். ஒருவழியாக குற்றவாளிகளை அடையாளம் கண்ட போலீசார் அதில்இருவரது படங்களைக் கைப்பற்றி வெளியிட்டனர்.
இவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகாரின் புத்த கயா பகுதியில் ஒரு கிராமத்தில் முகம்மத் கலாம், முகம்மத் கலீல் ஆகியோர் சிக்கினர்.
![]() |
இந் நிலையில் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய மேலும் இருவரது புகைப்படங்களை மகாராஷ்டிரரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். பல ரயில் நிலையங்களிலும் இந்தப் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஆதாரம் கேட்கும் முஷாரப்:
இதற்கிடையே பாகிஸ்தான் தொலைக்காட்சியில் உரையாற்றி அந் நாட்டு அதிபர் முஷாரப்,
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைநிறுத்த இந்தியா முடிவு செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது தீவிரவாதிகளுக்கு கிடைத்தவெற்றியாகும்.
அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கி வைப்பது என்பது, தீவிரவாதிகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையும்.அவர்களது கையில் இரு நாடுகளும் சிக்கி பந்தாடப்படும் நிலை உருவாகும்.
இப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்றுதான் தீவிரவாதிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமைதிஏற்படக் கூடாது, அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறக் கூடாது என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள்.அதற்கு இடம் கொடுப்பது போல இந்தியாவின் முடிவு அமைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.அமைதிப் பேச்சுவார்த்தை தடைபடுவதை இந்திய அரசு விரும்பாது என்று நான் நம்புகிறேன்.
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது என்பது தீவிரவாதத்திற்கான எதிரான இரு நாடுகளின் போருக்குக்கிடைத்த முதல் தோல்வியாகவே கருதப்படும். இந்தியாவில் நடக்கும் தீவிரவாத சம்பங்களுக்கு பாகிஸ்தானைகுறை கூறுவது பலவீனத்தையே காட்டும்.
எந்த ஒரு அறிக்கையையும், கருத்துக்களையும் வெளியிடும் முன்பு அதன் பிரதிபலிப்பு குறித்தும் யோசிக்கவேண்டும். மும்பையில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டித்துள்ளது. மும்பை மக்களுக்குநான் சொல்ல விரும்புவதெல்லாம், உங்களது துயரங்களில் நாங்கள் பங்கு கொள்கிறோம். அப்பாவி உயிர்கள்பலியானதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். பாகிஸ்தான் அரசும், நானும், பாகிஸ்தான் மக்களும் இந்த கொடூரசம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறோம்.
மும்பை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. சரியானஆதாரத்தை எங்களிடம் கொடுததால் நிச்சயம் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கும்.
அல் கொய்தா அமைப்பை பலவீனப்படுத்த பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது. தேசிய பாதுகாப்பும் இதில்அடங்கியுள்ளதால் இந்த விஷயத்தை நாங்கள் சீரியஸாக எடுத்துள்ளோம் என்றார் முஷாரப்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications