சசிகலாவின் நில ஆக்கிரமிப்பு- வேலிகளை பிடுங்கி எறிந்த பெண்கள்
சென்னை:
ஜெயலலிதாவின் தோழி சசிகலாாவல் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் தலித்நிலங்களை, ஆதிதிராவிடர் மண்ணுரிமை மீட்பு கூட்டமைப்பினர் நேரில் சென்றுஆய்வு செய்தனர். அப்போது சசியின் ஆட்களால் நிலத்தை சுற்றிலும்போடப்பட்டிருந்த முள்வேலிகளையும், கல் தூண்களை பெண்கள் பிடுங்கி எறிந்தனர்.
சென்னையை அடுத்த சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழிசசிகலாவுக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது. இங்குதான் ஜெயலலிதாஓய்வு எடுப்பது வழக்கம்.இந்த பங்களாவுக்கு அருகே கடந்த அண்ணா ஆட்சிக்காலத்தில், ஏழை தலித்சமூகத்தினருக்குக் கொடுக்கப்பட்ட 53 ஏக்கர் நிலம் உள்ளது. 20 தலித் குடும்பத்தினர்இந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
இந் நிலத்தை போலியான ஆவணங்களை தயாரித்து தனது பெயரிலும், பினாமிகள்பெயரிலும் சசிகலா பட்டா போட்டுக் கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தநிலத்தை மீட்டு மீண்டும் தலித்துகளுக்கே கொடுக்க வேண்டும் என முதல்வர்கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து பத்திரப் பதிவு அலுவலங்களில் ஆய்வு நடத்து வருகிறது.
இந் நிலையில், ஆதிதிராவிடர் மண்ணுரிமை மீட்பு கூட்டமைப்பு என்ற தலித்அமைப்பின் உறுப்பினர்கள் சிறுதாவூர் நிலங்களை நேரில் பார்வையிட்டனர்.
இந்தக் குழுவில், அம்பேத்கர் புரட்சிப் புலிகள் இயக்கத் தலைவர் கிருஷ்ணபறையனார், மக்கள் தேசம் தலைவர் சாத்தை பாக்கியராஜ், மக்கள் குடியரசுக் கட்சித்தலைவர் திருவள்ளுவன், எஸ்.சி, எஸ்.டி. மாணவர் இயக்கத் தலைவர் அன்பின்பொய்யாமொழி, பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இக்குழுவினர் சிறுதாவூர் சென்ற நிலங்களுக்கு சொந்தக்காரர்களை சந்தித்து விவரம்கேட்டறிந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட நிலங்களுக்குச் சென்றனர். தலித் குழுவுடன்ஏராளமான பெண்களும் கிராமத்தினரும் திரண்டு வந்தனர்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களது நிலங்களை அவர்கள் தலித் குழுவினரிடம் காட்டிவிளக்கினர். அப்போது தங்களது நிலங்களைச் சுற்றிலும் சசிகலாவின் ஆட்களால்போடப்பட்ட தடுப்பு முள்வேலிகளையும் கல் தூண்களையும் பெண்கள்ஆவேசத்துடன் பிடுங்கி கீழே எறிந்தனர்.
அவர்களை தலித் அமைப்பினர் சமாதானப்படுத்தினர். ஆக்கிரமிப்பு தொடர்பாகநிலங்களின் உரிமையாளர்கள் கூறுகையில், 1983ம் ஆண்டு வரை இங்கு பயிர்செய்தோம். அதன் பின்னர் மழை இல்லாததால் பயிரிட முடியமல் போனது.
பின்னர் 1992ம் ஆண்டு மீண்டும் விவசாயம் செய்யலாம் என வந்தபோது, எங்களதுநிலங்களை வாங்கி விட்டதாகவும், இங்கு இனிமேல் வரக் கூடாது என்றும்சசிகலாவின் ஆட்கள் தடுத்தனர். இங்கு முன்பு 20 வீடுகள் இருந்தன. அவற்றையும்இடித்து விட்டார்கள். அம்பேத்கர் சிலை வைத்திருந்தோம். அதையும் உடைத்துப்போட்டு விட்டனர் என்றனர்.
மண்ணுரிமை மீட்பு கூட்டமைப்பினர் கூறுகையில்,
தாசில்தார் அலுவலகத்திற்கசு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ய நிலம் யாருடையபெயரில் உள்ளது, யார் பெயரை மாற்றினார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களைசேகரிக்கவுள்ளோம். அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் யார் என்ற விவரத்தையும்சேகரிக்கிறோம்.
அதன் பின்னர் அனைத்து தலித் இயக்கங்களும் ஒன்றிணைந்து 53 ஏக்கர் நிலத்தையும்மீட்டு மீண்டும் தலித் மக்களை இங்கு பயிரிட உதவுவோம் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications