சட்டசபையைக் கலக்கிய கொசுக்கள்!
சென்னை:
தமிழக சட்டசபையில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநிாயகர் ஆவுடையப்பன்கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது. அப்போது சட்டசபை வளாகத்தில்கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொசு மயமாக உள்ளது. சிக்குன்குனியா நோய்பரவி வரும் நிலையில் இதுபோல கொசுக்கள் அதிக அளவில் இருப்பது உறுப்பினர்களை பயமுறுத்துவதாகஉள்ளதாக தெரிவிக்கப்பட்டது.உறுப்பினர்களின் கவலையை தானும் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்த சபாநாயகர் ஆவுடையப்பன்,கொசுக்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 1 கோடி:
சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்ந்து ரூ. 1 கோடியாகவே இருக்கும் என்று முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சிபிஐ உறுப்பினர் ராமசாமி பேசுகையில்,எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி குறித்து பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லையே என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த கருணாநிதி, இது வழக்கமாக வழங்கப்பட்டு வருவதுதான். புதிய திட்டம் கிடையாது.எனவே தற்போது வழங்கப்பட்டு வருவது போல தொடர்ந்து வழங்கப்படும். இதன் காரணமாகத்தான் அதுகுறித்துபட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்றார்.
எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
வீடு: அதிமுக ஆட்சியில் முறைகேடு:
இந் நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளதால்அந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளின் பட்டியல் மறு ஆய்வு செய்யப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக சபை கூடியதும் மறைந்த உறுப்பினர்கள்சோ.பாலகிருஷ்ணன், தென்னரசு உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் வாசித்தார். இதையடுத்து உறுப்பினர்கள்2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது. அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விவாதத்தைத் தொடங்கி வைத்துப்பேசினார்.
காங்கிரஸ் உறுப்பினர் பீட்டல் அல்போன்ஸ் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம்அமல்படுத்தப்பட்டது.
அந்தத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. பயனாளிகளை தேர்வு செய்வதில் அதிமுக அரசுபாரபட்சம் காட்டியுள்ளது என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் சபையில் தாக்கல் செய்தார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, பீட்டர் அல்போன்ஸ் காட்டும் ஆதாரங்களைப் பார்த்தால் இத்திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியல் மறு ஆய்வு செய்யப்படும் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications