டெல்லியில் மீண்டும் வெடிகுண்டு புரளி
டெல்லி:
டெல்லி செங்கோட்டை மற்றும் இந்தியா கேட்டில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில்வெடிகுண்டு புரளிகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் இந்தியா கேட்டில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக அடுத்தடுத்து 2 நாட்களுக்கு புரளி கிளம்பியது.இந்த நிலையில் இன்று பிற்பகல் செங்கோட்டை மற்றும் இந்தியா கேட்டில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இரண்டு முறை வதந்தி கிளம்பியது.
முதலில் பிற்பகல் 12.02 மணிக்கு இந்தியா கேட்டில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசித் தகவல் வந்தது. இதையடுத்து அங்குபோலீஸார் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
இந் நிலையில் 12.22 மணிக்கு செங்கோட்டையில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகபோலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கும் போலீஸ் படை அனுப்பப்பபட்டுசோதனை நடந்தது.
செங்கோட்டை பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள்அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். மோப்ப நாய்களுடன் வெடிகுண்டுநிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குண்டு எதுவும்சிக்கவில்லை.
செங்கோட்டையில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் அருகில் உள்ளமக்கள் நெரிசல் அதிகம் மிக்க சாந்தினி செளக் பகுதியில் பெரும் பதட்டம்காணப்பட்டது.
குண்டு வெடிப்பு: டாக்டர் கைதுஇந் நிலையில் மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21ம் தேதி 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் மேலும் 3 பேர்பிடிபட்டுள்ளனர். மும்பையில் வசிக்கும் தன்வீர் அன்சாரி என்பவரை குற்றபிரிவுபோலீசார் கைது செய்தனர். அவர் யுனானி டாக்டர் ஆவார்.
அவரை குற்றப் பிரிவு போலீசார் தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
இவர் பாகிஸ்தானுக்கு சென்று ஆயுதங்களை கையாளுதல், வெடிகுண்டுகளைஇயக்குதல் குறித்து பயிற்சி பெற்று வந்து இருக்கிறார். அந்த பயிற்சியை அவர்மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்து இருப்பதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார்தெரிவித்துள்ளனர்.
லஸ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தீவிரவாதியாக இருந்து கொண்டு டாக்டர்தொழிலையும் செய்து வந்து இருக்கிறார். இதே போல் மாரட்டிய மாநிலம் சோலாப்பூர்பகுதியில் ஒருவனும், கோண்ட்வா பகுதியில் மற்றொருவனும் பிடிபட்டுள்ளனர்.
விசாரணை தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் ஏஎன்.ராய் கூறியதாவது,
மும்பை குண்டு வெடிப்பு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.விரைவில் மேலும் சிலர் கைதாவார்கள். குண்டு வைத்தவர்களையோ சதி திட்டம்தீட்டியவர்களையோ நாங்கள் இன்னும் பிடிக்கவில்லை.
விசாரணை நடைபெற்று வருவதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாது எனஅவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications