இலங்கை விமான தாக்குதல்- 6 புலிகள் பலி
கொழும்பு:
இலங்கை விமானப் படைநடத்திய தாக்குதலில் தங்களது அமைப்பைச் சேர்ந்த 6வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள்தெரிவித்துள்ளனர்.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகள் முகாம்கள் மீது கடந்த 2நாட்களாக இலங்கை விமானப்படை தொடர்தாக்குதல் நடத்தி வருகிறது.இத் தாக்குதலில் 6 விடுதலைப் புலிகள் இறந்ததாகவும், பொதுமக்கள் 3 பேர் உள்பட 8பேர் காயமடைந்ததாகவும் புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரிகோணமலை மாவட்ட அரசியல் பிரிவு தலைவர் எழிலன் கூறுகையில்,
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்கரை பிராந்தியத்திற்குட்படட கதிரைவேலி என்றஇடத்தில் உள்ள முகாம் மீது இலங்கை விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில்எமது அமைப்பைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் 3 பேர் உள்பட 8 பேர்காயமடைந்துள்ளனர் என்றார்.
வெறுகல் ஆற்றிலிருந்து பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் குடிநீர்ப் பாதையைவிடுதலைப் புலிகள் அடைத்து விட்டதாக கூறி இந்தத் தாக்குதலைஇலங்கைவிமானப்படை நடத்தியுள்ளது.
வெறுகல் ஆற்றுப் பகுதியிலிருந்து புலிகளை அப்புறப்படுத்துவதே இந்தத்தாக்குதலின் நோக்கம் என்றும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல முல்லைத் தீவில் புலிகள் அமைத்து வரும் விமான தளத்தின் மீதும்விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஆனால் இதில் ஏற்பட்ட சேத விவரம் குறித்துத்தெரியவில்லை.
இந்த விமானப் படைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள்,விமானப்படைக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
நார்வே தூதர் பாயர் இலங்கை வரவுள்ள நிலையில், இலங்கை விமானப்படைநடத்தியுள்ள தாக்குதல் அமைதித் தீர்வுக்கான முயற்சிகளுக்கு பின்னடைவைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications