தமிழக்தில் மேலும் ஒரு பாஸ்போர்ட் அலுவலகம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகத்தில் மேலும் ஒரு பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க மத்திய அரசு ஆய்வுசெய்து வருவதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் அஹமது தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கேவில் எம்பி. பெல்லார்மின்எழுப்பிய கேள்விக்கு, அஹமது எழுத்து மூலம் ளித்த பதிலில் இத்தகவலைத்தெரிவித்துள்ளார்.பெல்லார்மின் கோரியபடி நாகர்கோவிலில் துணை பிராந்திய பாஸ்போர்ட்அலுவலகம் திறக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், தற்போதுசென்னை மற்றும் திருச்சியில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன, மேலும் ஒருஅலுவலகம் திறக்க ஆய்வு செய்து வருவதாகவும் அகமத் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் தற்போது மாவட்டங்களில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுகள்,முழுமையான பாஸ்போர்ட் அலுவலங்களாக தரம் உயர்த்தப்பட மாட்டாது என்றும்அவர் கூறினார்.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பிரிண்டர் பிரச்சனை காரணமாகதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் அந்தப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்றும்அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications