நாளை நடிகர் சங்கத் தேர்தல்: போலீஸ் துணை
சென்னை:
பரபரப்பான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நாளைநடைபெறுகிறது
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு சரத்குமார் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. நடிகர் சங்க வளாகத்தில்காலை 8 மணிக்கு இதற்கான வாக்குப் பதிவு தொடங்குகிறது.திரைப்பட நடிகர், நடிகையர், நாடக நடிகர்கள் உள்ளிட்ட 1,928 பேர் ஓட்டுப்போடவுள்ளனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டுஉடனே முடிவுகள் அறிவிக்கப்படும்.
மோதல் ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால் பலத்த பாதுகாப்புடன் தேர்தல்நடைபெறவுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, மன்சூர் அலிகான்ஆகியோரும், துணைத் தலைவர் பதவிக்கு விஜயக்குமார், மனோரமாஉள்ளிட்டோரும், பொருளாளர் பதவிக்கு கே.என்.காளை, நல்லதம்பி ஆகியோரும்போட்டியிடுவதால் பரபரப்பு நிலவுகிறது.
இதுதவிர 24 உறுப்பினர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சிம்பு, அப்பாஸ்,முரளி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், செந்தில், விந்தியா, மும்தாஜ், குண்டு கல்யாணம்உள்ளிட்ட 46 பேர் போட்டியில்உள்ளனர்.
சரத்குமார் அணிக்கு தற்போதைய தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.சரத்குமார் அணியினருக்கே வாக்களியுங்கள் என்று கோரி நடிகர், நடிகையருக்கு அவர்கடிதமும் அனுப்பியுள்ளார்.
இந் நிலையில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டிருக்கும் தேர்தல் அதிகாரி ராஜாமணியை எதிர்த்து நடிகர் குமரி முத்து சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜாமணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தபால் ஓட்டுக்களில் பெருமளவில்முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவர் தேர்தலை நடத்தக் கூடாது. தனியாக அட்வகேட் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் மூலம்தான் தேர்தலை நடத்தவேண்டும் என்று கோரியுள்ளார் குமரிமுத்து.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications