ராணுவ முகாம்கள் மீது புலிகள் பயங்கர தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

திரிகோணமலை:

இலங்கையில் திரிகோணமலை பகுதியில் இன்று 4 ராணுவ முகாம்கள் மீது புலிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.இதில் ஏராளமான இலங்கை ராணுவத்தினர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், 5 வீரர்களேபலியானதாகவும், பொது மக்களில் பலர் பலியாகியுள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.

நேற்று ஒரே நாளில் விடுதலைப் புலிகள் நடத்திய 2 தாக்குதல்களில் இலங்கைராணுவத்தைச் சேர்ந்த 33 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.

தடுப்பணையின் மதகுகளை புலிகள் மூடியதால் விமானப் படை மூலம் இலங்கைஅரசு தாக்குதலைத் தொடங்கியது. மேலும் தரைப் படையையும் புலிகளின்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் அனுப்பியது. ஆனால், அவர்கள் புலிகள் தரப்பில்இருந்து கடும் எதிர்த் தாக்குதலை சந்தித்து வருகின்றனர்.

நேற்று இலங்கை ராணுவத்துக்கு கடும் அதிர்ச்சி அளிக்கும் வகையில அடுத்தடுத்து 2பெரும் தாக்குதலை புலிகள் நடத்தினர்.

முதல் தாக்குதல் அல்லை என்ற இடத்திற்கு அருகே நடந்தது. ராணுவ வீரர்களுடன்சென்றுகொண்டிருந்த பேருந்தை விடுதலைப் புலிகள் கண்ணி வெடி வைத்துத்தகர்ததனர். இதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படைத் தளத்தில் கடற்படைகப்பல் மீதும் புலிகள் பயங்கர தாககுதல் தொடுத்தனர்.

காங்கேசன் துறையிலிருந்து கப்பலில் ராணுவ வீரர்கள் திரிகோணமலைக்குச்சென்றனர். திரிகோணமலை துறைமுகத்தை கப்பல் நெருங்கியபோது, படகுகளில்வந்த புலிகள் கப்பல் மீது வெடிகுண்டுகள், ராக்கெட்டுகளை வீசி தாக்கினர்.

இதில் 14 வீரர்கள் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத்தாக்குலுக்கு கடற்படை வீரர்கள பதிலடி கொடுத்தனர். விடுதலைப் புலிகளின் 3படகுகளை அவர்கள் மூழ்கடித்தனர்.

இருப்பினும் புலிகள் தரப்பில் உயிரிழப்பு பெரிதாக இல்லை என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் புலிகள் பயங்கர தரை வழிதாக்குதலை தொடங்கினர். மார்ட்டர்கள், ஆர்டிலரிகள் கொண்டு புலிகள் நடத்தியஇந்தத் தாக்குதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகக்கூறப்படுகிறது. ஆனால், 5 ராணுவத்தினரும் பொது மக்களில் பலரும்பலியாகியுள்ளதாகத ராணுவம் கூறியுள்ளது.

திரிகோணமலையில் கட்டைபரிச்சான், பழதோப்பு, பஞ்சனூர், மகிந்தபுரா ஆகியஇட்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். மேலும்ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முத்தூர் நகருக்குள் புலிகள் நுழைந்துள்ளனர்.

மேலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காந்திநகர், பழத்தோப்பு பகுதிகளைவிடுதலைப் புலிகள் கைப்பற்றிவிட்டதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைஇலங்கை ராணுவம் மறுத்துள்ளது.

புலிகளின் நிலைகள் மீது இலங்கை விமானப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.

45 அகதிகள் வருகை:

இதற்கிடையே இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து 45 இலங்கைதமிழர்கள் திருச்சி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமுக்குகொண்டு வரப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாம் நிரம்பி விட்டதால் 14 குடும்பங்களைச்சேர்ந்த 45 பேர் சிறப்பு பஸ் மூலம் வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த முகாமில் ஏற்கனவே 1,114 பேர் தாங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 385பெண்கள். போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் இப்போது புதிதாக வந்துள்ள45 பேரும் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காலிகமாக தாங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+