சபாநாயகர் மீது அதிமுக நம்பிக்கையில்லாதீர்மானம்!- தோல்வி!!
சென்னை:
தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஆவுடையப்பன் மீது அதிமுக இன்றுநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
இன்று காலை சட்டசபை தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் ஜெயக்குமார்,சேகர்பாபு ஆகியோர் ஒரு பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டனர். அவர்களுக்குஆதரவாக மற்ற அதிமுகவினரும் குரல் கொடுத்தனர். அவர்களை சபாநாயகர்உட்காரச் சென்னார்.பின்னர் பேசிய சபாநாயகர்,
பேரவை தலைவராக இருக்கும் என் மீது அதிமுக உறுப்பினர்கள் தம்பித்துரை,நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து இருக்கிறார். அந்த தீர்மானத்தின் ஏகப்பட்டகுறைபாடுகள் உள்ளன. என்றாலும் இந்த தீர்மானத்தின் மீது விவாதத்திற்கு அனுமதிஅளிக்கிறேன்.
தீர்மானத்தை முன் மொழிந்து வழிமொழியலாம். இது என் மீது கொடுக்கப்பட்டுள்ளநம்பிக்கையில்லா தீர்மானம். எனவே நான் இந்த இருக்கையில் (சபாநாயகர்இருக்கையில்) இருந்து கொண்டு விவாதத்தை நடத்துவது முறையல்ல, விவாதம்முடியும் வரை துணைத் தலைவர் அவையை நடத்துவார் என்று கூறி இருக்கையைவிட்டு எழுந்து சென்றார் ஆவுடையப்பன்.
இதையடுத்து துணை சபாநாயகர் விபி.துரைசாமி இருக்கையில் அமர்ந்து சபையைநடத்தினார். தீர்மானத்தை முன்மொழியுமாறு துரைசாமி கூற, உடனே தம்பித்துரைதீர்மானத்தை முன் மொழிந்தார். உடனே அதிமுக எம்எல்ஏக்கள் அதற்கு ஆதரவாகஎழுந்து நின்றனர்.
துணை சாபநாயகர்: தீர்மானம் முன்மொழியப்பட்டது. ஆனால் யாரும் வழிமொழியவில்லை. எனவே இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. (அப்போதுஅதிமுகவின்ர் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராகதிமுகவினரும் குரல் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் ஏற்பட்டது)
துணை சபாநாயகர்: யாராவது ஒருவர் பேச வேண்டும். எல்லோரும் எழுந்து நின்றுபேசக்கூடாது.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானம்கொண்டு வருவது பற்றி முன்னதாக எந்த அறிவிப்பும் கொடுக்காமல் விவாதத்துக்குஎடுத்து இருக்கிறீர்கள்.
அமைச்சர் அன்பழகன்: இந்த தீர்மானத்தை விவாதிக்கலாமா, கூடாதா? என்பதை அந்தஅவைதான் முடிவு செய்ய வேண்டும். அதற்காக சபையில் விதியை தளர்த்திவிவாதிக்க அனுமதிக்கலாம். நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்கும் உரிமை இந்தஅவைக்கு இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம்: இந்த தீர்மானத்தை முன்மொழிய வாய்ப்பு அளித்து விட்டு வழிமொழிய வாய்ப்பளிக்கவில்லை.
துணை சபாநாயகர்.: முன் மொழிந்தவர்கள் தான் வழி மொழியவும் கடமைப்பட்டுஇருக்கிறீர்கள்.
அமைச்சர் அன்பழகன்: முறையாக இந்த தீர்மானத்தை கொண்டு வர முடியவில்லைஎன்றால், தம்பித்துரை இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கவே கூடாது.
ஓ.பன்னீர்செல்வம்: முன்மொழிய வாய்ப்பளித்துவிட்டு வழிமொழியவாய்ப்பளிக்கவில்லை.
துணை சபாநாயகர்: முன் மொழிந்த பிறகு நீண்ட இடைவெளி இருந்தது. எழுந்துநின்று கூச்சல் தான் போட்டீர்களே தவிர, நீங்கள் யாரும் வழிமொழியவில்லை.
அமைச்சர் அன்பழகன்: வழிமொழியவில்லை என்பது தேவையில்லை. தீர்மானத்தைஎடுத்துக் கொண்டு விவாதிக்கலாம்.
துணைசபாநாயகர்: தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: கடந்த ஆட்சியின் போது சபாநாயகர் மீதுநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு 15 நாட்களுக்கு முன்பே நாங்கள் எழுதிகொடுத்தோம். 15 நாள் கழித்து தான் தீர்மானத்தை எடுத்தார்கள். ஆனால் இப்போதுநேற்று எழுதிக் கொடுத்து இன்றே விவாதத்துக் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இதுதான் ஜனநாயகம்.
தம்பிதுரை: கடந்த 31ம் தேதி அதிமுக உறுப்பினர்கள் பேரவை தலைவர் உத்தரவுப்படிசபைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பெண்எம்எல்ஏக்களை வெளியேற்றிய முறை சரியில்லை. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தபெண் உறுப்பினர் பதர் சயீத்திடம் அத்துமீறி நடந்து இருக்கிறார்கள். (தொடர்ந்து அவர்பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க துணை சபாநாயகர்உத்தரவிட்டார்).
இந்த அவையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால் பாதுகாப்புஇல்லை.
அன்பழகன்: பெண் காவல்களை வைத்து தான் பெண் எம்எல்ஏக்களைவெளியேற்றுகிறார்கள்.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.) அதிமுக ஆட்சி காலத்திலும் பெண் எம்எல்ஏக்கள்வெளியேற்றப்பட்டார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உறுப்பினர் 3முறை சொல்லி இருக்கிறார். இந்த ஆட்சியில் பெண்களுக்கு முழு பாதுகாப்புஅளிக்கப்படுகிறது. குறிப்பாக அவரது கட்சி தலைவர் தன்னந்தனியாக சட்டசபைக்குவந்து உரையாற்றி விட்டு பாதுகாப்பாகத் தானே சென்றிருக்கிறார்.
பரிதி இளம்வழுதி: அதிமுக ஆட்சியில் ஜனனி (நடராஜனின் தோழி-கள்ள நோட்டுஜனனி) என்ற பெண்ணுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்பதுஎல்லோருக்கும் தெரியும்.
செங்கோட்டையன்: சட்டசபைக்குள் பேசிக்கொண்டு இருக்கும் போது ஜனனி என்றுவெளியே உள்ள நிகழ்ச்சிகளை கொண்டு வருவது சரியல்ல.
காயத்திரி தேவி (காங்கிரஸ்): பெண் எம்எல்ஏக்கள் வெளியேற்றப்படும் போது இதேவரிசையில் இருந்து நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். (இதற்கு பெண்எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்)
காயத்திரிதேவி: பதர் சயீத்திடம் பெண் காவலர்கள் மிகவும் பணிவாகத்தான் நடந்துகொண்டார்கள். இதை சும்மா ஒரு பிரச்சனை ஆக்க வேண்டும் என்று அதிமுகவினர்பேசுகிறார்கள்.
அமைச்சர் பொன்முடி: கடந்த ஆட்சியின் போது சென்னா ரெட்டி (கவர்னர் என்னிடம்தவறாக நடந்து கொண்டார் என ஜெயலலிதா குண்டு போட்டது) மீதே பழிபோட்டவர்கள் இப்போது பிரச்சனையை திசை திருப்புவதற்காக இந்த பிரச்சனையைகொண்டு வருகிறார்கள். (அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்)
பாலபாரதி (மார்சிஸ்ட் கம்யூ.) இங்கு நடந்த எல்ல சம்பவங்களையும் நாங்கள்பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். காயத்திரி சொல்வது தான் உண்மை. ஆண்காவலர்கள் யாரும் அந்தப் பக்கம் செல்லவில்லை. பெண் காவலர்கள் தான் பெண்எம்எல்ஏக்களிடம் சென்றார்கள். இதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். அவையில்உண்மைக்கு புறம்பாக பேசுவது அழகல்ல. சிறுபான்மைப் பெண்களை அவமதிக்கும்வதையில் அதிமுக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம்: இந்தத் தீர்மானத்தின் மீது பேச விடாமல் குறுக்கீடு செய்கிறார்கள்.இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். (உடனே பன்னீர்செல்வம்தலைமையில் அதிமுக கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்)
அவர்களை தொடர்ந்து மதிமுக, விடுதலை சிறுத்தை உறுப்பினர்களும் வெளிநடப்புசெய்தனர்.
ஆற்காடு வீராசாமி பேரவை தலைவர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லாதீர்மானத்துக்கு ஆதாரம் இல்லாத காரணத்தால், சிறுபான்மையினருக்கு பாதுகாப்புஇல்லை என்று கூறிவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில்சபாநாயகர் எதிர்கட்சியினர் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை.
(அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் லாபியில் இருந்து கோஷமிட்டுக் கொண்டுஇருந்தனர். அவர்களை வெளியேற்றும்படி துணை சபாநாயகர் உத்தரவிட்டார்)
ஆற்காடு வீராசாமி: 25.04.2004 அன்று திமுகவினரை குண்டுகட்டாக வெளியேதூக்கிச் சென்றார்கள். கருத்து சொல்ல வாய்ப்பு அளிக்கவில்லை. 5 ஆண்டு அதிமுகஆட்சியில் 14 முறை எங்களை வெளியோற்றி இருக்கிறார்கள். இன்றைய சபாநாயகர்நேர்மையோடு நடந்து கொண்டு இருக்கிறார்.
அவர் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. இதை தெரிந்து கொண்டதால் அவர்கள்(அதிமுக எம்எல்ஏக்கள்) வெளியேறி இருக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதி: இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்று அதிமுகவினர்ஒப்புக்கொண்டு வெளியேறி விட்டார்கள். இன்றைய சபாநாயகர் நேர்மையானவர்.எனவே தாங்களே அவைத்தலைவராக இருந்து அவையை வழி நடத்த வேண்டும்.
தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பாமக எம்எல்ஏ ஜிகே.மணிஆகியோர் பேசுகையில், சபாநாயகராக ஆவுடையப்பனே தொடர வேண்டும் என்றும்அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் கூறினர்.
அன்பழகன்: அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் ஏற்கவில்லை.எனவே தாங்கள் தொடர்ந்து அவைத் தலைவராக இருந்து சபையை நடத்த வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது.தீர்மானத்தை ஏற்கவில்லை என அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்தனர்.இதையடுத்து தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் துரைசாமிஅறிவித்தார்.
இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார்.மேஜைகளைத் தட்டி அவரை உறுப்பினர்கள் வரவேற்றனர். தன்னை ஆதரித்து பேசியஅனைவருக்கும் நன்றி தெரிவித்தா ஆவுடையப்பன்.
அதன் பிறகு சபையில் மற்ற விவாதங்கள் தொடங்கின.












Click it and Unblock the Notifications