காவிரி நடுவர் மன்ற பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
டெல்லி:
காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தமிழகம் மற்றும் கர்நாடகமாநிலங்களுக்கிடையே பிரச்சினை முற்றியதால் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்புவி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில், நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.அன்று முதல் காவிரி நடுவர் மன்றம் விசாரணை மேற்கொண்டு வந்தது. வருகிற 6ம்தேதியுடன் நடுவர் மன்றத்தின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்குள் இறுதித் தீர்ப்புவந்து விடும் என விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர்.
ஆனால் நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங்குக்கும், உறுப்பினர்கள் சுதிர் நாராயணன்,ராவ் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தீர்ப்பைவழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந் நிலையில், தற்போதைய பதவிக் காலத்திற்குள் இறுதித் தீர்ப்பை வழங்குவதுகடினம். எனவே பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நடுவர்மன்றம் கோரிக்கை விடுத்தது.
மேலும் இனிமேல் வாதங்கள், விசாரணைகள் தேவையில்லை, இறுதித் தீர்ப்புஒத்திவைக்கப்படுவதாகவும் நடுவர் மன்றம் அறிவித்தது.
இதைப் பரிசீலித்த மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சகம், தற்போது நடுவர்மன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் இறுதித்தீர்ப்பு வெளியாக மேலும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 1990ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம்அமைக்கப்பட்டது.
1991ம் ஆண்டு ஜூன் மாதம் இடைக்காலத் தீர்ப்பை வெளியிட்டது நடுவர் மன்றம்.அதன்படி, தமிழகத்திற்கு, ஆண்டுதோறும் கர்நாடக அரசு 205 டிஎம்சி தண்ணீரைவிடுவிக்க வேண்டும் என இடைக்கால தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதை கர்நாடகம் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் கடந்த 1998ம்ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் வற்புறுத்தலின் பேரில்,அப்போதைய பிரதமர் வாஜ்பாய், காவிரி நீர் ஆணையத்தை அமைத்தார்.
பிரதமரைத் தலைவராகக் கொண்ட இந்த அமைப்பும் காவிரிப் பிரச்சினையில்கர்நாடகத்தை பணிய வைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications