திருப்பதியில் கிருஸ்துவ மத பிரச்சாரம்: தடுக்க கோவில் நிர்வாகம் முடிவு
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கிருஸ்துவ மதப் பிரச்சாரம் நடப்பதைத் தடுக்கதேவஸ்தானத்தின் சார்பில் தனிப் படைகள் அமைக்கப்படவுள்ளன.
திருப்பதி கோவிலை சுற்றி கிருஸ்துவ மதப் பிரச்சாரம் நடப்பதாகவும், கோவிலின் பல காண்ட்ராக்ட்கள்கேரளத்தைச் சேர்ந்த கிருஸ்துவ நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ளதாதவும், இதற்கு ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டியே காரணம் என்றும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.ராஜசேகர ரெட்டி, கிருஸ்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கடந்த வாரம் திருமலையில் பாலாஜி நகரில் உள்ள சில வீட்டுக் கதவுகளில் சிலுவைவரையப்பட்டு, பைபிள் வசனங்களும் எழுதப்பட்டிருந்தன. இதையடுத்து பரபரப்பு அதிகமானது.
இதையடுத்து கோவில் நிர்வாகத்தினருடன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து திருப்பது தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி பலராமய்யா, பாலாஜி நகருக்குச் சென்றார்.அப் பகுதியினரை சந்தித்து. இங்கு வேற்று மதப் பிரச்சாரம் நடந்தால் உடனே அதிகாரிகளுக்குத்தெரியப்படுத்துமாறு கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திருப்பதி கோவில் பகுதியை சுற்றி பிற மதப் பிரச்சாரம் நடப்பதைதடுக்க தேவஸ்தானத்தின் சார்பில் தனிப்படை அமைக்கப்படும். திருமலையில் வசிப்போர் அனைவரும் திருநாமம்பூசிக் கொள்வது என்று உறுதியளித்துள்ளனர்.
இதனால் பிற மதத்தினரின் நடமாட்டத்தை எளிதில் கண்காணிக்க முடியும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications