தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக ரத்தினவேல் பாண்டியன்நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிரத்தினவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1993ம் ஆண்டுஇந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் புதிய தலைவராகரத்தினவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில்பாண்டியன் இருப்பார்.உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர்ரத்தினவேல் பாண்டியன்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்தது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கநியமிக்கப்பட்ட பெஞ்ச்சில் பாண்டியனும் இடம் பெற்றிருந்தார். பல்வேறுவிசாரணைக் கமிஷன்களுக்குத் தலைவராகவும், மத்திய அரசு பணியாளர் ஊதியக்குழு தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
ரத்தினவேல் பாண்டியன், முதல்வர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர் என்பதும்குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications