காதலுக்கு எதிர்ப்பு: அண்ணியைக் கொன்ற பெண் காதலனுடன் கைது!
சென்னை:
சென்னை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணியை, தனது காதலனுடன்சேர்ந்து கொலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அருகே அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர்போண்டா கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.நாகராஜனின் தங்கை லதா.
இவர் மீது நாகராஜன் உயிரையே வைத்திருந்தார். தங்கைக்காக கணக்குவழக்கில்லாமல் செலவழிப்பாராம். இதை செல்வி விரும்பவில்லை. வீட்டுக்குக் கூடவைக்காமல் இப்படி தங்கைக்காக கண் மூடித்தனமாக செல வழிக்கிறீர்களே என்றுகணவருடன் அடிக்கடி வாதம் புரிந்து வந்துள்ளார்.
பிரச்சினை ஏற்பட்டதால் தனது தாய் வீட்டிலிருந்து அத்திப்பட்டுக்கு இடம் பெயர்ந்தார்நாகராஜன். அவ்வப்போது அம்பத்தூர் வந்து தாய், தங்கையை பார்த்து செல்வார்.இந்த நிலையில் லதாவுக்கும், லேத் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வரும்கோபிநாத் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இந்தக் காதல் கர்ப்பத்தில் முடிந்தது. இதையடுத்து யாருக்கும் தெரியாமல் லதாவின்கர்ப்பத்தை அவரது குடும்பத்தினர் கலைத்து விட்டனர். ஆனால் இந்த விஷயம்நாகராஜனுக்கு தெரியாது.
இந்த நிலையில் தனிக் குடித்தனத்தால் ஏற்பட்ட செலவுகளை சமாளிக்க முடியாதநாகராஜன், மனைவி குழந்தைகளுடன் மீண்டும் அம்பத்தூருக்கு வந்தார்.
இங்கு வந்தும் தொடர்ந்து தனது தங்கைக்காக செலவு செய்ய ஆரம்பித்தார். இதனால்அவருக்கும் செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் லதாவின் காதல் விஷயம் செல்விக்குத் தெரியவந்தது. அவர் லதாவைக்கண்டித்துள்ளார்.
ஆனால் இதை லதா விரும்பவில்லை. தன்னை காதலுடன் பேசக்கூடாது, பார்க்கக்கூடாது என்று செல்வி தடை போட்டதை அவர் விரும்பவில்லை. தனது காதலுக்குஅண்ணி இடையூறாக இருப்பதை உணர்ந்த அவர் கொலை செய்ய சதி திட்டமிட்டார்.
இதுகுறித்து கோபிநாத்திடம் கூறியபோது, அதுதான் சரி என்று அவரும் ஒப்புதல்அளித்தார். இதையடுத்து லதா கொடுத்த ஐடியாப்படி, தலையில் ஹெல்மட் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்த கோபிநாத், செல்வியை உருட்டுக் கட்டையால் அடித்துக்கொலை செய்தார்.
இதைத்தொடர்ந்து லதா போலீஸில் புகார் செய்தார். சில திருடர்கள் வந்து தனதுஅண்ணியைக் கொன்று விட்டு நகையை எடுத்துச் சென்று விட்டதாக அவர் கூறினார்.போலீஸார் விசாரணை நடத்தினர்.
லதா கூறியபடி வீட்டில் நகைகள் எதுவும் திருடு போகாதது தெரியவந்தது.இதையடுதது லதா மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணைநடத்தினர். அப்போது தான் நடந்தது தெரியவந்தது.
மேலும், செல்வியின் மகன், தனது அத்தை லதா தான் ஹெல்மட் போட்டிருந்தவரிடம்உருட்டுக்கட்டையை எடுத்தக்கொடுத்தார்.
அதை வைத்துத்தான் அந்த நபர் தனது அம்மாவை அடித்துக் கொன்றதாகவாக்குமூலம் தெரிவித்தான். இதையடுத்து லதாவை போலீஸார் கைது செய்தனர்.
வாலாஜாவில் தலைமறைவாக இருந்த கோபிநாத்தையும் போலீஸார் கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications