திரிகோணமலை-பலாலியில் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்: பலர் பலி - யாழ் நோக்கி முன்னேற்றம்!
யாழ்ப்பாணம்:
திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப்புலிகள் இன்று அதிகாலை நடத்திய பெரும் தாக்குதலில் கடற்படைமுகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டன. பலாலி விமான தளம் மீது விமானம் மூலம் விடுதலைப் புலிகள் குண்டுவீசித் தாக்கியதால் முழு அளவிலான போர் மூண்டுள்ளது. இரு தாக்குதல்களையும் வெற்றிகரமாக மேற்கொண்டபுலிகள் தற்போது யாழ்ப்பாணத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று அதிகாலை திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவு கடும் தாக்குதலைமேற்கொண்டது. கடந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னர் இன்று தான் விடுதலைப்புலிகள் முழு அளவிலான மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டனர்.திரிகோணமலை துறைமுகப் பகுதிகளில் உள்ள ராணுவம் மறறும் கடற்படை முகாம்களை விடுதலைப்புலிகளின்பீரங்கிக் குண்டுகள் துளைத்தெடுத்தன.
இந்த துறைமுகம் வழியாகத் தான் இலங்கை ராணுவத்திற்கும், கடற்படையினருக்கும் ஆயுத சப்ளை நடந்துவருகிறது. இதைத் தகர்க்க திட்டமிட்ட விடுதலைப் புலிகள் இன்று காலை தங்களது பெரும் தாக்குதலைமேற்கொண்டனர். சரமாரியான பீரஙகித் தாக்குதல்கள் மற்றும் ராக்கெட் வீச்சில் கடற்படை முகாம்கள் அடியோடுஅழிக்கப்பட்டன. பல கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
புலிகளின் ஆவேசத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடற்படை வீரர்களும், ராணுவ வீரர்களும் பின் வாங்கிச்சென்றனர். இதைத் தொடர்ந்து திரிகோணமலை துறைமுகத்தையும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் முக்கியச்சாலையை விடுதலைப்புலிகள் குண்டு வீசித் துண்டித்தனர்.
அதேசமயம், அரசு வசம் உள்ள யாழ்ப்பாணத்த்தில் உள்ள பலாலி விமான தளம் மீது, போர்விமானம் மூலம்விடுதலைப் புலிகள் சரமாரியாக தாக்கினர். பலாலி விமான தளத்தைச் சுற்றிலும் உள்ள 10க்கும் மேற்பட்டராணுவ நிலையங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டன. பல வீரர்கள் கொல்லப்பட்டனர்.
புலிகளின் விமானத்தாக்குதலில் இலங்கை ராணுவத்தின் 2 போர் விமானங்கள் சேதமடைந்தன. இரு பெரும்தாக்குதல்களை வெற்றிகரமாகமுடித்த விடுதலைப் புலிகள் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையிலானதேசியநெடுஞ்சாலையை தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர்.இதையடுத்து திரிகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புலிகள் வேகமாக முன்னேறிச் செல்வதாககூறப்படுகிறது.
போர் மூண்டதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குகுவிக்கப்பட்டுள்ள 40,000 ராணுவ வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடும் சண்டையைஎதிர்பார்த்து அப்பாவித் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வேகமாக வெளியேறி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தை கைப்பற்ற புலிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழர்களின் கலாச்சார தாயகமானயாழ்ப்பாணத்தை மீட்க முழு அளவில் புலிகள் குதித்துள்ளதால் இலங்கை அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு விமானம் மூலம் மிகப் பெரிய தாக்குதலை விடுதலைப் புலிகள்மேற்கொண்டுள்ளதும் இலங்கையை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதற்கிடையே, தங்களது அனைத்துப் படையினரையும் போரில் ஈடுபடுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளின்ராணுவ செய்தித் தொடர்பாளர் இருசய்யா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது வீரர்கள், மாலுமிகள், விமானப்படை வீரர்கள், கடற்படை வீரர்களைமுழு அளவில் பயன்படுத்தி எங்களது தாயகத்தையும், எங்களது மக்களையும் காப்போம்.
பலாலி விமான தளம் மீது எங்களது போர் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு ராணுவத்திற்கு பெரும்நாசம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தின் வசம் உள்ள யாழ் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிளிநொச்சிமாவட்டத்திற்கு அவர்கள் தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
தப்பிச் செல்லும் தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது என்று கூறினார்இளந்திரையன். தற்போது திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையிலான ஏ9 நெடுஞ்சாலையில் புலிகள்தரைமார்க்கமாகமுன்னேறி வருகிறார்கள். யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளிலும் விடுதலைப்புலிகள் ராணுவத்துடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கடற்கரைப் பகுதிகளிலும் கடும் சண்டை நடந்து வருகிறது. கமலை பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டு விட்டதாக புலிகள் தரப்புதெரிவித்துள்ளது. விரைவில் யாழ்ப்பாணத்தை நெருங்கி விடுவோம் என புலிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் புலிகளின இந்த செய்தியை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. பலாலி விமான தளம் ராணுவத்தின்முழுக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சண்டை நடந்து வருகிறது. ஆனால் புலிகளின் விமானம் தாக்குதலில்ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான செய்தி என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளில் வசிககும் தமிழர்கள் தென்மராச்சி பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் வானொலி கேட்டுக் கொண்டுள்ளது. தமிழர்கள் வசிக்கும்பகுதிகளில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் உடனடியாக மக்கள் அங்கிருந்துவெளியேறு மாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், எழுத்துமடுவல், புலோ பல்லாய், கிலாலி, கொடிகாமம், கச்சை, வரனி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்அங்கிருந்து வெளியேறி விடுமாறும் விடுதலைப் புலிகளின் வானொலி எச்சரித்துள்ளது.
புலிகள் தங்களது முழு பலத்துடன் தாக்குதலில் இறங்கியுள்ளதால், இலங்கையில் முழு அளவில் போர்மூண்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications