விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதல்; யாழ். துண்டிப்பு!திணறும் ராணுவம் - தமிழர்களை வேட்டையாடுகிறது!
கொழும்பு:
யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் விடுதலைப் புலிகள் சூழ்ந்துள்ளனர்.யாழ்ப்பாணத்திற்கும், இலங்கையின் பிற பகுதிகளுக்கும் இடையேயான தகவல்தொடர்பு, மின்சாரம், உணவுப் பொருள் விநியோகம் முற்றிலும்துண்டிக்கப்பட்டுள்ளது. புலிகளின் தீவிரத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறும்ராணுவம், ஆத்திரத்தில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று விடுதலைப் புலிகள் முழு வீச்சில் போரைத்தொடங்கினர். திரிகோணமலை துறைமுகம், பலாலி விமானதளம் ஆகியவற்றில் கடும்தாக்குதலை மேற்கொண்டனர். மேலும், முதல் முறையாக விமானத்தாக்குதலையும்மேற்கொண்டு இலங்கை அரசுக்கும், ராணுவத்திற்கும் பெரும் அதிர்ச்சியைக்கொடுத்தனர் விடுதலைப் புலிகள்.தற்போது யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் தீவிர முயற்சியில் புலிகள்ஈடுபட்டுள்ளனர். வடக்கு யாழ்ப்பாண எல்லையில் ராணுவம் வசம் உள்ள பகுதிகள்பலவற்றில் புலிகள் ஊடுறுவி கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். யாழ் தீபகற்பம்முழுவதையும் புலிகள் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் முழுவதும் தகவல் தொடர்பு, மின்சாரம், உணவுசப்ளை ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில்உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலைஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருள்கிடைக்காமல் தமிழர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். யாழ் தீபகற்பம் முழுவதும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளாதால்அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தாக்குதல்தீவிரமாக இருப்பதால் ராணுவம் திணறிவருகிறது.
மேலும், யாழ்ப்பாணத்திற்குள் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஆயுத சப்ளையும்,உணவும் வருவது தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்திற்குள்நிலை கொண்டுள்ள ராணுவத்தினர் பீதியடைந்துள்ளனர்.இந்த ஆத்திரத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழர்களை வேட்டையாடும் நடவடிக்கையில்இலங்கை ராணுவம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இருப்பினும், யாழ்ப்பாணம் தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டில்தான் உள்ளதாகராணுவம் கூறியுள்ளது. இந்த சண்டையில் 27வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 90 பேர்காயமடைந்திருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், ராணுவத்துடனான சண்டையில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருப்பதாகசர்வதேச சண்டை நிறுத்த கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்குச்செல்லும் அனைத்து சப்ளை வழிகளையும் புலிகள் துண்டிக்கும் முயற்சியில்ஈடுபட்டிருப்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புலிகளின் விமானத்தாக்குதலுக்கு ஆளான பலாலி விமானதளம் பெருமளவில்சேதமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிரபலமான ஜேன்ஸ்பாதுகாப்பு வாரப் பத்திரிக்கையில், ஆய்வாளர் இக்பால் அதாஸ் கூறுகையில்,இலங்கை ராணுவம் கடும் நெருக்கடியில் உள்ளது.
பலாலி விமானதளம் பெருமளவில் சேதமடைந்துள்ளது. இது ராணுவத்திற்கு பெரும்பின்னடைவாக இருக்கும். இந்த விமான தளம்தான் இலங்கை ராணுவத்திற்கும்,விமானப் படைக்கும் உயிர்நாடியாக விளங்கி வருகிறது என்று கூறியுள்ளார் அதாஸ்.
தமிழர் தலைவர் சுட்டுக்கொலை
இதற்கிடையில் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் அரசின் சார்பில் பங்கேற்றகுழுவில் இடம் பெற்றிருந்த தமிழர் தலைவரான கீதேஷ் லோகநாதன் அடையாளம்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பில் முன்பு இருந்தவர்லோகநாதன். பூடான் தலைநகர் திம்புவில் கடந்த 1984ம் ஆண்டு நடந்த அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பிலான குழுவில் இடம்பெற்றிருந்தார்.
பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகிய லோகநாதன் எந்த அமைப்பிலும்பங்கேற்காமல் இருந்து வந்தார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள லோகநாதன்,நார்வே தூதுக்குழு, இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் இலங்கை அரசின் சார்பில் கலந்து கொண்ட குழுவின் துணைஇயக்குநராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை அவர் கொழும்பு புறநகரில் உள்ள தெக்கிவளைஎன்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத சிலரால்சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை சுட்டுக் கொன்றது யார் என்று தெரியவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள்தான் லோகநாதனை சுட்டுக் கொன்றுள்ளனர் என்று அதிபர் ராஜபக்ஷே கருதுவதாகஅதிபரின் செய்தித் தொடர்பாளர் சந்திரபாலா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications