லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த ஐநாவில் தீர்மானம்;தாக்குதலை தொடரும் இஸ்ரேல்!
நியூயார்க்:
லெபனானன் மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த ஐநா பாதுகாப்பு சபையில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதைக் கண்டுகொள்ளாத இஸ்ரேல்,தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
கடந்த ஒரு மாதமாக லெபனான் மீது இஸ்ரேல் கடும்தாக்குதலை நடத்தி வருகிறது.ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை ஒடுக்கவே இந்தத் தாக்குதல் என இஸ்ரேல் கூறினாலும்கூட பலியானது என்னவோ அப்பாவி மக்கள்தான். பல லட்சம் பேர் பாதுகாப்பானஇடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். லெபனானின் தெற்குப் பகுதி மயானக்காடாகியுள்ளது.இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலைமுடிவுக்குக் கொண்டு வர ஐநா பாதுகாப்புசபையில் நேற்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து முக்கிய நாடுகளும் இந்த தீர்மானத்தை ஆதரித்துவாக்களித்ததால் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
தீர்மான விவரம்: இஸ்ரேல் தனது தாக்குதல்கள் அத்தனையையும் முழுமையாககைவிட வேண்டும். அதேபோல, ஹிஸ்புல்லா அமைப்பு தனது நடவடிக்கைகளைமுடிவுக்குக் கொண்டுவர வேண்டும். வடக்கு இஸ்ரேல் மற்றும் தெற்கு லெபனான்இடையே அமைதியை நிலை நாட்ட சர்வதேச அமைதிப் படை அங்குஅனுப்பப்படும்.
இப்படையில் 15,000 வீரர்கள் இருப்பார்கள் ஆகியவை தீர்மானத்தின் முக்கியஅம்சங்கள் ஆகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இத்தீர்மானம் ஒருமனதாகநிறைவேற்றப்பட்டது. அதேபோல இஸ்ரேலும், லெபனானும் இந்தத் தீர்மானத்தைதங்களது அமைச்சரவையைக் கூட்டி நிறைவேற்றவுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பும்இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து ஐநா பொதுச் செயலாளர் கோபி அன்னான், இஸ்ரேல் மற்றும்லெபனான் பிரதமர்களை சந்தித்து ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வரும்கையெழுத்திடப்படும். நாளை முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா அனுப்பும் அமைதி காக்கும் படையினர், லெபனான் எல்லையில் இஸ்ரேல்குவித்துள்ள 30,000 இஸ்ரேலிய படையினர் வாபஸ் ஆவதை கண்காணிப்பார்கள்.அதேபோல, இஸ்ரேல், லெபனான் படையினர் தாக்குதல்களில் ஈடுபடாமல்கண்காணிப்பார்கள்.
மேலும், லெபனானில் உள்ள லித்தானி ஆற்றிலிருந்து இஸ்ரேல் எல்லை வரைஅமைதிப் பகுதியாக அறிவிக்கப்படும். இங்கு இரு நாட்டு ராணுவத்தினர்,ஹிஸ்புல்லா அமைப்பினர் நுழையக் கூடாது. ஆயுதங்களற்ற பகுதியாக இதுமாற்றப்படும்.
ஆனால் ஐ.நா.தீர்மானம் நிறைவேற்றியது பற்றி சற்றும் கவலைப்படாமல் இஸ்ரேல்தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. லெபனானில் உள்ள காண்டோரியாகிராமத்திற்குள் இஸ்ரேல் தனது படைகளை மேலும் முன்னேற வைத்துள்ளது.
அங்கு ஹிஸ்புல்லா படையினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடும்சண்டை நடந்து வருகிறது. அதேபோல பெய்ரூட் நகரின் புறநகர் பகுதிகளில் இஸ்ரேல்குண்டு வீசித்தாக்குதல் நடத்தி வருகிறது.
சிடோன் நகரில் இஸ்ரேல் நடத்திய சரமாரித் தாக்குதலில் ஒரு மின் உற்பத்தி நிலையம்முழுமையாக தரை மட்டமானது. இதேபோல பெய்ரூட் மூசிரியா தலைநகர் டமாஸ்கஸ்இடையிலான நெடுஞ்சாலையையும் இஸ்ரேல் படைகள் குண்டு வீசித் தகர்த்தன.
இதேபோல டயர் நகரிலும் இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.இந்தத் தாக்குதல்களில் 20 அப்பாவி மக்கள் பலியானதாக லெபனான்தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications