அந்தமான் விமானத்தில் கோளாறு: 50 பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து அந்தமான் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் என்ஜின்கோளா காரணமாக அரை மணி நேரத்தில் மீண்டும் சென்னை விமான நிலையத்தில்தரை இறங்கியது.
சென்னை விமான நிலையத்திலிருந்து போர்ட்பிளேர் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் 50 பயணிகளுடன் புதன்கிழமை காலை 6.15 மணிக்கு கிளம்பியது.விமானம் கிளம்பியசிறிது நேரத்திலேயே என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து அரை மணி நேரத்திலேயே விமானம மீண்டும் சென்னைக்கு திரும்பிவந்தது. 7.15 மணிக்கு விமானம் பத்திரமாக தரை இறங்கியது.பழுது சரி செய்யப்பட்ட பின்னர் வியாழக்கிழமை காலை விமானம் மீண்டும் போர்ட்பிளேர் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications