அணுசக்தி ஒப்பந்தம்: விஞ்ஞானிகளுடன் பிரதமர் ஆலோசனை
டெல்லி:
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகளுடன் பிரதமர்மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும்,இடதுசாரிக்கட்சிகளும் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என அச்சம்தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் நாட்டின் மூத்த விஞ்ஞானிகள் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றைஅனுப்பினர். அதில் இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தால் நாட்டுக்கு ஏற்படும் பாதகங்களை விளக்கிஇதைத் தடுக்குமாறு கோரியிருந்தனர்.
இதையடுத்து அணு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்தார்.அதன்படி இன்று காலை பிரதமரை சந்தித்து அணு விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்தது.
இதில் விவாதிக்கப்பட்ட பொருள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்தியாவை அணு சக்தி நாடாகஉருவாக்கியதில் அணு விஞ்ஞானிகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. அவர்கள் இல்லாமல்இதுசாத்தியமாகியிருக்காது. எனவே அணு விஞ்ஞானிகளின் கருத்துக்கள், கவலைகள் குறித்து மத்திய அரசுநிச்சயம் பரிசீலிக்கும் என்று மட்டும் பிரதமர் அலுவலகம் வெளியிடட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் இந்திய அணுசக்தி கழக தலைவரும், அணு சக்தி துறையின் செயலாளருமான டாக்டர்அனில் ககோதக்கரும் கலந்து கொண்டார்.இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு பாதகமான சிலகருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இடதுசாரி எம்.பிக்கள் கோரியிருந்தனர்.
ஆனால் இதை ஏற்க அரசு மருத்து விட்டது. மாறாக, இதுகுறித்து விவாதம் நடத்த அரசு ஒப்புக் கொண்டுள்ளது.எனவே இதுதொடரபாக நாளை நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிப்பார்.
அப்போது விஞ்ஞானிகளுடன் நடந்த ஆலோசனை குறித்தும் அவர் விளக்குவார் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications