சென்னை: சிக்குன் குனியாவுக்கு 2 சிறுமிகள் பலி?
சென்னை:
சென்னை தண்டையார்பேட்டையில் சிக்குன் குனியா காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலியாகியுள்ளனர். இதனால் வட சென்னையில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா காய்ச்சல் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காய்ச்சலுக்குயாரும் பலியாகவில்லை என்று அரசும் நலத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரனும் கூறி வந்தாலும் ஆங்காங்கேசிலர் இறந்தவண்ணம் உள்ளனர்.இந் நிலையில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் கலைச்செல்வி ஆகிய இரு சிறுமிகள் சிக்குன்குனியாவுக்குப் பலியாகியுள்ளனர்.
12 வயதான கலைச்செல்வி 7ம் வகுப்பு படித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் வந்தது. இதையடுத்துஅவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நிலைமை மோசமானதால் அவர் ஸ்டான்லி மருத்துவமனைககுகொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே கலைச்செல்வி இறந்து போனார். இவருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் தாக்கியிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.
கலைச்செல்வி மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இரு சிறுமிகளுக்கும் கடந்த வாரம் ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைநிநத்தப்பட்டுள்ளது. அந்த சோதனையில் மர்ம காய்ச்சல் அவர்களைத் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் சந்தேகித்தனர்.
இருப்பினும் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே இரு சிறுமிகளும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் சந்தேகிக்கின்றனர். இந்த இருசாவுகளால் வட சென்னையில் பரபரப்பு நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications