செளதியில் தமிழக கட்டட தொழிலாளி படுகொலை
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி, செளதி அரோபியாவில் படுகொலைசெய்யப்பட்டார்.
![]() |
| கொலையான ஷேக் முகம்மது தனது மனைவி, மகள்களுடன் |
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டரிடம் அவரது மனைவி மனுகொடுத்துள்ளார்.
குமரி மாவட்டம் காரியமங்கலத்து விளையைச் சேர்ந்த ஷேக் முகமது (33) இரண்டு வருடங்களுக்கு முன் செளதிஅரேபியா சென்றார். அங்கு அல் கத்தீப் நகரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அவருடன் குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த வாலிபர்களும் தங்கியிருந்தனர். இந் நிலையில் கடந்த10ம் தேதி ஷாப்பிங் சென்ட்டரில் ஒரு அறையில் ஷேக் முகமது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
கொலை நடந்த அன்று அவருடன் தங்கி இருந்த வாலிபர்கள் மாயமாகிவிட்டனர். இந்த கொலை தொடர்பாகசெளதி அரேபியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேக் முகமதுவின் உடல் செளதி அரேபியாவில்உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஷேக் முகமதுவுக்கு ஷமீமா பீவி (33) என்ற மனைவியும், அஷிரின் பாத்திமா (7),அர்பினா ஷெரீன் (3) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
ஷேக் முகமதுவின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு குமரி மாவட்ட கலெக்டர் சுனீல் பாலிவாலிடம்ஷமீமா மனு கொடுத்துள்ளார்.
ஷேக் முகமதுவை கொலை செய்த, அவருடன் தங்கி இருந்த வாலிபர்கள் போலி பாஸ்போர்ட் மூலம்இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளதாகத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications