படை குவிக்கும் இலங்கை-அவலத்தில் யாழ்பாணம்இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் வட பகுதிக்கு கூடுதல் படைகளை ராணுவம் அனுப்பியுள்ளது. போர்தீவிரமடைந்து வருவதால் வடக்குப் பகுதியிலிருந்து நிவாரணப் பணியாளர்கள்இடத்தைக் காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர்.

இலஙகையின் வட பகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணத்தைப்பிடிக்க விடுதலைப் புலிகள் கடும் போரில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 3 வாரங்களாக விடுதலைப புலிகள் கடுமையாக தாக்கி வருவதால்யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் ராணுவம் சோர்வடைந்துள்ளது. இந் நிலையில்,திரிகோணமலைக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த வீரர்களை கப்பல் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப இலங்கை அரசுதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரு தரப்பும் கடுமையாக மோதி வருவதால் அவர்களிடமிருந்து உயிர் தப்பிநிவாரணப் பணியாளர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடி வருகின்றனர்.இவர்களில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுக்களைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும்அடக்கம்.

இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே ராக்கெட் குண்டுகள் வந்து விழுந்ததேஇடத்தை காலி செய்வதற்கு முக்கியக் காரணமாகும்.

ஏற்கனே நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந் பாரீஸைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின்ஊழியர்களான 17 தமிழர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதுநினைவிருகக்கலாம். அதன் பின்னர் போர் நடைபெறும் பகுதியில் தங்கியிருக்கநிவாரணப் பணியாளர்கள அஞ்சுகின்றனர்.

அவலத்தில் யாழ்-தேங்காய் விலை ரூ. 250:

யாழ்ப்பாணத்தை மீட்க விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலில்ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் விடுதலைப் புலிகள் சூழ்ந்து கடும்தாக்குதலை நடத்தி வருவதால், யாழ்ப்பாணத்திற்குள் நிலை கொண்டுள்ள 40,000ராணுவ வீரர்களும் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கும், நாட்டின் பிற பகுதிகளுக்குமான தொடர்பை புலிகள் துண்டித்துவிட்டனர். இதனால் தரை மார்க்கமாக யாழ்ப்பாணத்தை யாரும் நெருங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தில் தகவல் தொடர்பு, உணவு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துஅத்தியாவசிய சப்ளையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின்தாக்குதலிலிருந்து தப்பிக்க தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு உள்ளேயே இருந்தால்தான்நாம் தப்பிக்க முடியும் என்பதால், ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அமல்படுத்திதமிழர்கள் யாரும் வெளியேறி விடாமல் தடுத்து வருகிறது ராணுவம்.

இந்த கெடுபிடி காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள்வீடுகளுக்குள்ளேயேமுடங்கிக் கிடக்கின்றனர். கடைகள், அனைத்தும் தொடர்ந்துமூடிக் கிடக்கின்றன. சாலைப் பாக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உணவு வினியோகம், மின்சாரம்,தகவல் தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை இருப்பதால் கிடைக்கிற உணவுப்பொருட்களை அதிக விலை வைத்து விற்று வருகின்றனர்.

ஒரு தேங்காய் ரூ. 250க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பச்சை மிளகாய் 60ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுபோல அத்தனை பொருட்களும் கடும் விலைஉயர்வைக் கண்டுள்ளன. விலை அதிகமாக இருந்தும் கூட பல பொருட்களுக்குப்பற்றாக்குறையும் நிலவுகிறது.

மீனவர்களும் கடலுக்குப் போகாமல் வீடுகளுக்குள்முடங்கிக் கிடக்கின்றனர்.அவர்களுடைய படகுகள், வலைகள் உள்ளிட்டவை ராணுவத்தால் சூறையாடப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் முற்றுகை எப்போது முடியும், எப்போது சுதந்திரமாக நடமாட முடியும் என்றஏக்கத்தில் அங்கு வாழும் தமிழர்கள் தவித்து வருகின்றனர்.

இன்று முதல் தெ.ஆசிய விளையாட்டு போட்டி:

இதற்கிடையே 10வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இலங்கையில் இன்று

தொடங்குகின்றன. தலைநகர் கொழும்பில் வரும் 28ம் தேதி வரை இப் போட்டிகள் நடக்கும்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம் உள்பட 8 நாடுகளைசேர்ந்த 2,000 வீரர்கள் போட்டியில் கலந்து கொள்கின்றனர். கால்பந்து, கைப்பந்து,தடகளம், டேபிள் டென்னிஸ் உள்பட மொத்தம் 20 வகையான போட்டிகள் நடக்கும்.

இந்தியா சார்பில் 300 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 17போட்டியில் இந்திய அணியினர் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாஅணிவகுப்பில் இந்திய அணிக்கு துப்பாக்கி சுடும் வீரர் அசோக் பண்டிட் கொடியேந்திதலைமை வகித்து செல்கிறார். போட்டியை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேதொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் வண்ணமயமான வாணவேடிக்கைகளும் கோலாகலமாக நடைபெறுகிறது.

கொழும்பில் கடந்த திங்கள்கிழமை பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததைதொடர்ந்து 3 நாடுகள் கிரிக்கெட் போட்டிக்காக வந்த தென் ஆப்பிரிக்கா அணிபோட்டியில் இருந்து விலகி நாடு திரும்பி விட்டது.இந்தப் பின்னணியில் தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி தொடங்கியது:

இதற்கிடையே இன்று இந்தியா, இலங்கை இடையில் நடைபெறுவதாக உள்ளமுதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய களமிறங்கியது. இன்று முதல்இன்னிங்ஸ் மட்டும் நடக்கிறது. அதாவது 50 ஓவர்கள் மட்டும் இன்றுவிளையாடப்படும். இரண்டாவது இன்னிங்ஸ் நாளை நடக்கவுள்ளது.

போட்டியையொட்டி விளையாட்டு மைதானத்தின் உள்பகுதியிலும்,வெளியிலும்பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா விலகி விட்டதால்இந்தியாவும், இலங்கையும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் கோரிக்கை:

இதற்கிடையே, இருதரப்பும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஐரோப்பியயூனியனும், அமெரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தப் பிரச்சினை குறித்து நார்வே மத்தியஸ்த குழு, ஜப்பான் ஆகிய நாட்டுபிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+