ஐயப்பன் கோவில்: கேரளஅரசு புதிய முடிவு
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 15 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்கலாம்.அந்த முடிவை கேரள அரசு எதிர்க்காது என்று அம்மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன்தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்திய இளம்வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கேரள அரசு, திருவாங்கூர் தேவஸம் போர்டு, கேரளமாநிலஅறநிலையத்துறை ஆணையர், சபரிமலை தலைமை தந்திரி, பத்தனம்திட்டா மாவட்ட மாஜிஸ்திரேட்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நோட்டீஸ் குறித்து மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதகாரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க கேரள அரசு எதிர்க்கவில்லை. இதே பதிலைத்தான்உச்சநீதிமன்றத்திற்கும் தரவுள்ளோம்.
இடதுசாரி கூட்டணி அரசு சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டது. பாலின பாகுபாட்டை நாங்கள் எதிர்க்கிறோம்.இருப்பினும் சபரிமலை கோவிலின் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட மாட்டோம். அதுதொடர்பானசர்ச்சைகளிலும் நாங்கள் தலையிட மாட்டோம் என்றார்.
அமைச்சரின் கருத்து குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ராமன் நாயர் கூறுகையில்,ஒவ்வொருவருக்கும் ஒருகருத்து உண்டு. அமைச்சர் தனது கருத்தைக் கூறியுள்ளார்.
ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய பழக்கங்கள், நடைமுறைகள்மிகவும் பழமையானவை, தேவசம் போர்டு தொடங்குவதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தபழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறிதது உச்சநீதிமன்றத்தில் விரிவாக எடுத்துரைப்போம் என்றார் ராமன் நாயர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications