சுவை நீராக மாறிய கடல் நீர்: மும்பையில் பரபரப்பு!
மும்பை:
மும்பையின் மாஹிம் கடற் பகுதியில் கடல் நீர் திடீரென சுவை நீராக மாறியதால் அந்த தண்ணீரைக் குடிக்கஆயிரக்கணக்கான மக்கள் கடலுக்கு படையெடுத்தனர். இதனால் மாஹிம் கடற்கரைப் பகுதியில் பெரும்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
2004ம் ஆண்டு வந்த சுனாமிக்குப் பிறகு இந்திய கடல் பகுதிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.கடல் நீர்உள் வாங்குவதும், பொங்குவதும், திடீரென உள்ளே வருவதுமாக இருக்கின்றன.இந்த நிலையில், மும்பையின் மாஹிம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை திடீரென கடல் நீர் இனிப்புத்தன்மைகொண்டதாக மாறியது. இந்தத் தகவல் பரவியதும் கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாகபடையெடுத்தனர்.இதனால் மாஹிம் பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
சுவை நீராக மாறிய கடல் நீரை குடித்துப் பார்க்க மக்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. பலர் கையோடுஎடுத்து வந்திரந்த வாளி, கேன்கள, பாட்டில்களில் தண்ணிரைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.
கடல் பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் கூடியதால் அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டு மக்களை கலைந்துபோக செய்தனர். இருப்பினும் போலீஸாரைக் கண்டுகொள்ளாத பொதுமக்கள் தண்ணீரை சுவைப்பதில் ஆர்வமாகஇருந்தனர்.
இந்த நிலையில் கடல்நீர் சுவை நீராக மாறியது குறித்து அறிந்ததும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்துவந்து பரிசோதனைக்காக நீரை எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவுகள் தெரியும் வரையில் இந்தத் தண்ணீரையாரும் குடிக்க வேண்டாம் எனறும் அவர்கள் எச்சரித்தள்ளனர்.
தற்போது மாஹிம் பகுதியில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் நடந்து விடாமல்தடுக்க தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.விடியவிடிய மாஹிம் மக்கள் மட்டுமல்லாது மும்பையின் பல்வேறு பகுதிகைளச் சேர்ந்த மக்கள் கடல் நீரைசுவைக்க அலைமோதியபடி இருந்தனர்.
குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்தினர்தான் அதிக அளவில் இங்கு வந்தனர். சுபி துறவி ஒருவரின் சமாதி மாஹிம்பகுதியில் உள்ளது. அவரது அருளால் தான் கடல் நீர் சுவை நீராகமாறி விட்டதாக பரவிய தகவல்காரணமாகமுஸ்லீம்கள் அதிக அளவில் குவிந்தனர்.












Click it and Unblock the Notifications