துர்கை அம்மன் சிலை பால் குடித்ததாக சென்னையில் பரபரப்பு!
சென்னை:
அம்மன் சிலை பால் குடிப்பதாக வந்த செய்தியால் சென்னையில் பரபரப்புஏற்பட்டது.
கடந்த 1995ம் ஆண்டு பிள்ளையார் சிலை பால் குடிப்பதாக நாடு முழுவதும் பரபரப்புஏற்பட்டது. இதையடுத்து பிள்ளையார் சிலையை நோக்கி பாலுடன் பக்தர்கள்படையெடுத்தனர்.நீண்டவரிசையில் நின்று பிள்ளாையர் சிலைகளுக்கு பால் கொடுத்தனர். கோவில் சாலைகள் மட்டுமல்லாது பிள்ளாைர் உருவம் எங்கெல்லாம் இருந்ததோஅந்த உருவங்களுக்கெல்லாம் பால் கொடுத்து பாரதத்தையே கலக்கினர் பக்தர்கள்.
இப்போது மீண்டும் அதேபோன்ற இரு பரபரப்புகள் நாட்டை கலக்கிக்கொண்டிருக்கின்றன. மும்பையில் தர்ஹா அமைந்துள்ள இடத்துக்கு அருகே கடல் நீர்குடிநீராக மாறியதாக பரபரப்பு எழுந்தது. இதற்கு விஞ்ஞானிகள் அறிவியல்காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், மீண்டும்பிள்ளையார் சிலைகள் பால் குடிப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது அம்மன் சிலைகள் பால் குடிப்பதாக வட மாநிலங்களில் செய்தி பரவிபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துர்கை, காளி அம்மன் சிலைகள் பால்குடிப்பதாக உ.பி.மாநிலம் பரேலி பகுதியில் முதலில் பரபரப்பு கிளம்பியது.
தான் கொடுத்த பாலை காளி சிலை குடித்து விட்டதாக ஒரு பெண் கூறிய தகவல்காட்டுத் தீ போல பரவியது. உ.பி.யிலிருந்து கிளம்பிய இந்த தகவல், பஞ்சாப்,ஹரியானா, டெல்லி, குஜராத் என வட்டமிட்டு மாநிலஙகள்முழுவதும் பரவியது.
பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள அம்மன் சிலைகளுக்க பால் கொடுத்த வண்ணம்உள்ளனர். சிலர் சிவனுக்கும் பால் கொடுத்தனர்.நேற்று எழுந்த பரபரப்பு இன்றும் குறையாமல் துர்கை, காளி உள்ளிட்ட அம்மன்சிலைகளுக்கு மக்கள் பால் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
கொல்கத்தா, அகமதாபாத், கான்பூர், குருஷேத்திரா, பாட்னா என பல நகரங்களில்இந்தபால் குடி படலம் படு வேகமாக அரங்கேறி வருகிறது. பெண்கள் சின்னப்பாத்திரங்கள் முதல் பெரிய குடங்கள் வரை பாலுடன் அலை மோதி வருகின்றனர்.
இந்த அம்மன் பால் குடிக்கும் அதிசயம் இன்று சென்னையையும் தாக்கியது.கொட்டிவாக்கம் பகுதியிலஉள்ள நாகாத்தம்மன் கோவிலில் உள்ள துர்கை அம்மன்சிலைக்கு சிலர் பால் கொடுத்தனர். அதை அம்மன் சிலை குடித்த விட்டதாக செய்திபரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஏராளமான பெண்கள் சின்னக்கின்னங்களில் பால் கொண்டு வந்துவரிசையில் நின்று அம்மனுக்கப் பால் கொடுத்தனர். இந்தக் கோவில் உள்ள இடத்தில்முன்பு பாம்புப் புற்று இருந்ததாம். அந்த இடத்தில் தான் துர்கைக்கு சிலைஎழுப்பினார்ளாம். எனவே பாம்புதான் துர்கை வடிவத்தில் வந்து பால் குடிப்பதாகபக்தர்கள் பேசுகிறார்கள்.
இப்படி சாமி சிலைகள் பால் குடிப்பதாக பரவியுள்ள தகவலால் வட இந்தியாவேஅல்லோகல்லப் பட்டுக் கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications