ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லா கான் காலமானார்:இந்துஸ்தானி இசையின் முக்கிய தூண் சரிந்தது
வாரணாசி:
![]() |
பிரபல ஷெனாய் கலைஞர் பாரத் ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது90.
கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றியிருந்த கான், தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வாரணாசி ஹர் சராய் பகுதியில் உள்ள அவரது வீட்டில்வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
பிகாரில் துமாரான் நகரில் 1916ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பிறந்த பிஸ்மில்லா கான், தனது ஷெனாய் இசையால்மக்களை கட்டிப் போட்டவர். அவரது மறைவின் மூலம் இந்துஸ்தானி இசையுலகின் முக்கிய தூண் சரிந்துவிட்டது.
வாரணாசியின் கங்கை கரையோரத்தில் உள்ள பாலாஜி ஆலயத்தில் அமர்ந்து தான் தனது ஷெனாய் இசைப்பயிற்சியை இளம் வயதில் மேற்கொண்டார் பிஸ்மில்லா கான். மதத்தால் இஸ்லாமியராக இருந்தாலும், தனக்குபாலாஜியின் கருணை இருந்ததால் தான் ஷெனாய் இசையை தன்னால் கற்க முடிந்ததாகக் கூறியவர் கான்.
தனது திவ்யமான ஷெனாய் இசை மூலம் மதங்களைக் கடந்து இதயங்களை வென்றவர் பிஸ்மில்லா கான்.
ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் எனஉலகம் முழுவதும் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. அங்கெல்லாம் பயணித்து இசை நிகழ்ச்சிநடத்தியுள்ளார்.
கல்யாண வீடுகளில் மட்டுமே இசைக்கப்பட்டு வந்த ஷெனாய் இசைக் கருவிக்கு கிளாசிக்கல் மியூசிக்கில் இடம்பிடித்துத் தந்த பெருமை கொண்டவர் பிஸ்மில்லா சாகிப் என அழைக்கப்பட்ட கான்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சாந்தி நிகேதன் ஆகியவை கானுக்கு கெளர டாக்டர் பட்டம் வழங்கிசிறப்பித்தன. சங்கீத நாடக அகாடமி விருதில் ஆரம்பித்து பத்மபூஷன் வரை கணக்கில்லா விருதுகளை வென்றபிஸ்மில்லா கானுக்கு 2001ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
குரு-சிஷ்ய பரம்பரை சிதைந்து போனது, இசை முழுக்க முழுக்க வர்த்தகமயமானது, மதவாதம் ஆகியவற்றைதனது கடைசி காலங்களில் கண்டித்து வந்தவர் பிஸ்மில்லா கான். வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்புகளைமனித நேயமற்ற, தேச விரோத செயல் என கண்டித்தவர்.
தனது இறுதி மூச்சை காசியில் (வாரணாசி) தான் விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்த பிஸ்மில்லாகான் அதிலும் வென்று விட்டார். தனது இசையை வைத்து கோடிக்கணக்கில் பணம் ஈட்டியிருக்க முடியும்என்றாலும் அதை விரும்பாமல் மிக எளிமையாய் வாழ்ந்து மறைந்திருக்கிறார் கான்.
வாரணாசிக்கு அடுத்தபடியாக பிஸ்மில்லா கானுக்கு பிடித்த இடம் ஹைதராபாத். அங்கு இந்துஸ்தானிகலைஞர்களுடன் கலந்துரையாடுவது, புதிய இசை முயற்சிகள் மேற்கொள்வதில் தீராத ஆர்வம் காட்டியவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications