சென்னை காங். விழாவில் நட்வர்; நெளிந்த தலைவர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடந்த ராஜீவ் காந்தி பிறந்த நாள்விழாவுக்கு காங்கிரஸ் கட்சியிலிருந்துநீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் திடீரென வந்ததால் பெரும்சலசலப்பு ஏற்பட்டது. தலைவர்கள் நட்வரைப் பார்த்து நெளிந்தனர்.

சென்னை காமராஜர்அரங்கத்தில் நேற்று ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது. தமிழகத்திற்கான மேலிடப் பொறுப்பாளர் வீரப்ப மொய்லிதலைமையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் தலைவர்கிருஷணசாமி, மூத்த தலைவர் ஜெயந்திர நடராஜன் உள்ளிட்டோர் மேடையில்அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கு நட்வர்சிங் திடீரென வந்தார். அவரைப் பார்த்து தலைவர்கள் மற்றும்அரங்கில் கூடியிருந்தோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர் எதற்கு வந்தார் எனஅனைத்துத் தலைவர்களும் நெளிய ஆரம்பித்தனர். நேராக மேடைக்கு வந்தநட்வர்சிங் அங்கே அமர்ந்திருந்த தலைவர்களிடம் கைகுலுக்குவதற்காக கையைநீட்டினார்.

ஆனால் பதிலுக்கு யாரும் கை நீட்டவில்லை. இருந்தாலும் கண்டுகொள்ளாத நட்வர்,நேராக மேடை மீது வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி புகைப்படத்திற்கு அருகேசென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து அமைதியாகவெளியேறினார்.

நட்வர்சிங் வந்தது குறித்து மொய்லி கூறுகையில், நாங்கள் அவரை அழைக்கவில்லை.அழைக்காமலேயே அவர் வந்தார். காங்கிரஸுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. அப்படி இருக்கையில் எப்படி அவர் இங்கு வந்தார் என்பது புரியவில்லை.எப்படி இந்தத் தைரியம் அவருக்கு வந்தது?

இதுபோல செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த முடியும் எனஇவர்கள் நினைத்தால் அது தோல்வியில் தான் முடியும் என்று கோபமாக கூறினார்மொய்லி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+