85 அகதிகளை சிறை பிடித்த இலங்கை கடறபடை!தமிழக படகோட்டிகள் 3 பேரும் கைது!
கொழும்பு:
தமிழகத்திற்கு படகுகளில் வந்த 85 தமிழ் அகதிகளை நடுக்கடலில் வளைத்துப்பிடித்து இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை அழைத்து வந்த 3 தமிழகபடகோட்டிகளைளும் கைது செய்யப்பட்டனர்.
இலங்கயிைல் மோதல்முற்றி வருவதால் அஙகிருந்து தமிழர்கள்அதிக அளவில்அகதிகளாக வந்து கொண்டுள்ளனர்.இந் நிலையில், மன்னார் பகுதியில் நடுக்கடலில் அகிகதிகள் வந்த படகை வழிமறித்தஇலங்கை கடற்படை அதில் இருந்த 85அகதிகளை சிறை பிடித்து மீண்டும்இலங்கைக்கே கொண்ட சென்றது. அவர்களை அழைத்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 3படகோட்டிகளும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும பேசாலை பகுதிகயை சேர்ந்தவர்கள். பிடிபட்டவர்கள்தலைமன்னாரில் சிறை வைக்கப்பட்டு பின்னர் காவல் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டனர். 3 படகோட்டிகளையும் அதே காவல் நிலையத்தில்கடற்படையினர் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 528 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர்.காலைமுதலே அதிக அளவில் அகதிகள் வந்துகொண்டிருந்தனர்.
தனுஷ்கோடியில் 400 பேரும், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளுக்கும் அகதிகள்வந்தனர். மொத்தம் 528 பேர் வந்துள்ளனர். அனைவரும் விசாரணக்குப் பின்னர்மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த 7 மாதஙகளில் ஒரே நாளில் அதிக அளவில் அகதிகள் வந்தது நேற்றுதான்.
திரிகோணமலையைச் சேர்ந்த ராஜசூரியன் எனபவர் தனது 79 வயது நோயுற்ற தாயைவிட்டு விட்டு வந்துள்ளதாக கண்ணீருடன் குறிப்பிட்டார். அவரை படகிலில் அழைத்துவரமுடியாததால் விட்டுவிட்டு வந்து விட்டதாகக் கூறினர்.
இலங்கையில் நடந்து வரும் மோதலில் ராணுவத்திற்கு தான் அதிக அளவில் இழப்புஏற்பட்டுள்ளதாகவும் அகதிகள் தெரிவிக்கின்றனர். யாழ்பாபாணத்தில் 8 லட்சம்தமிழர்கள் உள்ளனராம்.
அவர்களை ராணுவம் குறி வைத்து தாக்கி வருவதாலும் அவர்களுக்கு உணவு வரும்வழியைக் கூட ராணுவம் அடைத்துவிட்டதாலும் அவர்கள் தற்போது விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து கொணட் ராணுவத்தை எதிர்த்து சண்டையில்இறங்கியுள்ளதாகவும் அகதிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள 40,000ராணுவ வீரர்களும் மிகுந்த அச்சத்தில்இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் உள்ளே ஊடுறுவி விட்டால் அவர்களது கதிஅவ்வளவு தான் என்றும் அகதிகள் தெரிவித்தனர்.
இந்த ராணுவத்தினரை புலிகள் சூழ்ந்துள்ளதால் அவர்களுக்கும் ராணுவதலைமையிடத்திற்கும் எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லை என்றும்ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் தவித்துவருவதாகவும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
பல ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை விட்டு விட்டு தப்பி ஓடி வருவதாகவும்அகதிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் சவப்பெட்டி ஊர்வலம்:
இதற்கிடையே இலங்கையில் 61அப்பாவி சிறுமிகளை இலங்கை ராணுவம் கொன்றதற்கு கண்டனம தெரிவித்து சென்னையில் சவப்பெட்டியுடன் அமைதி ஊர்வலம்நடத்தப்பட்டது.
தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. மன்ரோ சிலையிலிருந்து சவப்பெட்டியுடன் ஊர்வலம் தெடங்கியது.ஊர்வலத்திற்கு ஒருங்கிணப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.
பெரியார் திராவிட கழக செயலாளர் ராஜேந்திரன், தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், இயக்குனர்கள்தங்கர்பச்சான், சீமான்,வி.சி.குகநாதன், பாடலாசிரியர்அறிவுமதி, இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏராளமான பெண்கள், சிறுவர், சிறுமியரும் ஊர்வத்தில் பங்கேற்றனர். சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு ஊர்வலம் முடிந்தது. அங்கு பலியானசிறுமிகளுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications