இலங்கை- வைகோவுக்கு கருணாநிதி பதில்
சென்னை:
ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து மதிமுக பொதுச் செயலாளர்வைகோவுக்கு கூறிய குற்றச்சாட்டுக்கு முதல்வர் கருணாநிதி பதில்அளித்துள்ளார்.
சட்டசபையில் இன்று மதிமுக எம்எல்ஏ கண்ணப்பன் பேசுகையில்,நேற்று முன்தினம் எழுப்பப்பட்ட பிரச்சனைக்கு வைகோபத்திரிக்கை வாயிலாக பதில் கூறி இருக்கிறார். குறிப்பிட்டதேதியில் அந்த சம்பவம் நடைபெறவில்லை என்று வைகோகூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதுஎன்றாலும் விடுதலைப் புலிகளுக்கு தாராமீக ஆதரவு கொடுத்துபேசுவது தவறு இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காகசட்டம் ஒழங்கு சீர்குலைக்க சிறிதும் அனுமதிக்க முடியாதுவிடுதலைப்புலிகளுக்கு நிதி உதவியோ, ஆயுத உதவியோசெய்யாமல் தார்மீக ஆதரவு கொடுப்பது தவறு அல்ல.
ஆயுதம் தாங்கி போராடுவதாகவும், நாட்டை பிரிப்பதாகவும்யாராவது பேசி இருந்தால் அதை நாங்கள் ஒத்துகொள்ளமாட்டோம். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசிஇருக்கலாம். அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
வைகோ அன்றைய சூழ்நிலையில் கடல் மார்க்கமாக இலங்கைசென்று திரும்பி இருக்கிறார்.
(இதையடுத்து பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி. காங்கிரஸ் எம்எல்ஏசுதர்சனம், இந்திய கம்யூனிஸ்டு எம்எல்ஏ சிவபுண்ணியம் உள்படபலர் பேசினார்கள். அப்போது இந்த ஆட்சி 100வது நாள் சாதனைகுறித்தும் இலங்கை பிரச்சனை பற்றியும் பேசினார்கள்)
இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்து கூறியதாவது,
ஆட்சியின் 100வது நாள் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தஅனைவருக்கும் நன்றி. பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகன் நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் வகையில் உடல்நலத்துடன் இந்த அவைக்கு வந்திருக்கிறார்.
நமது வாழ்த்தெல்லாம் அவருக்கு மருந்தாக அமைந்திருக்கிறது.சிலர் மனதளவில் வாழ்த்துகிறார்கள். அவர்களுக்கும் மனமார்ந்தநன்றி. 100 நாள் ஆட்சிக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துஇருக்கிறார். அவருக்கு எனது வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்.
எதிர்ப்பும் அரவணைப்பும் இருந்தால் தான் எதுவும் இயங்கமுடியும். உங்கள் அனைவரின் அன்பால் கருணையால், ஆதரவால்இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம்இந்த அவையில் நான் பேசிய கருத்து குறித்து அருமை நண்பர்கண்ணப்பன் கூறிப்பிட்டார்.
அவருடைய கட்சி தலைவர் குறிப்பிட்ட தேதியில் அந்த சம்பவம்நடைபெறவில்லை என கூறியுள்ளார் என குறிப்பிட்டதாக கூறிஇருக்கிறார். ஒரு வேளை வயதான காரணத்தால் தேதியில் தவறுஏற்பட்டு இருக்கலாம். சேதியல் தவறு இல்லை. தேதியும் சரியானதுதான்.
கோபால் சாமி அன்றைய தினம் திடீரென்று இலங்கைக்கு கடல்வழியாக மர்மபயணம் ஒன்றை மேற்கொண்டார். யாருக்கும்சொல்லாமல் அவர் மேற்கொண்ட பயணம் அவரை பொறுத்தவரைநல்ல எண்ணத்தோடு, நல்ல குறிக்கோளோடு செய்யப்பட்டபயணம் என்றாலும் அவர் சொன்ன கருந்து என்னைபுண்படுத்துகிறது.
1989ம் ஆண்டு அவர் வன்னிகாட்டுக்கு என்னிடம் சொல்லாமல்பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 5ம் தேதி அவர் எழுதிகொடுத்த கடிதம் 24ம் தேதி எனக்கு கிடைத்தது. பத்திரிகைகளிலும்இந்த செய்தி வந்தது.
நான் கலைஞருக்கு எழுதிய கடிதம் சில நாள் தாமதமாக கொடுக்கவேண்டும் என்று அவரே சொன்னதாக செய்திகள் அப்போதேவெளியாகி உள்ளன. ஈழத் தமிழர் வாழ்வில் விடிவு பிறக்கும் என்றநம்பிக்கையில் ஈழப்போர் நடந்தபோதே பிரபாகரனை சந்திக்கசென்றதாகவும் அந்த கால கட்டத்தில் நான் தெரியப்படுத்தவிரும்பியதை பிரபாகரனிடம் சொல்வதற்காவும் அவர் போனதாககுறிப்பிட்டுள்ளார்.
இதில் இருந்தே ஜமுக்காளத்தில் வடிகட்ட்டப்பட்டது எது என்பதைதெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு கால கட்டத்திலும் ஈழத்தில்சகோதர யுத்தம் கூடாது என்பதை நான் வற்புறுத்தி வருகிறேன்.இலங்கை தமிழர் பிரச்சனையிலும் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும்.
அது என்னால் தான் ஏற்பட்டது என்று இன்னொருவரை கழுத்தைபிடித்து தள்ளுவதாக இருக்க கூடாது. வைகோ இலங்கை சென்றதுஆர்வம் காரணமாகத் தான். இப்போது இலங்கையில் தமிழர்கள்,சிங்கள வெறியர்களால் தாக்கப்படுகிறார்கள்.
தமிழர்களை யார் காப்பாற்றுவது என்று சண்டை போட வேண்டியஅவசியம் இல்லை. அவர்கள் வாழ்வு நலம் பெற வேண்டியதுஅவசியம். இங்கு நான் ஆற்றிய உரைக்கு பிறகு வைகோபேசினாலும், யார் பேசினாலும் அதை நான் பொருட்படுத்தபோவது இல்லை.
அத்தனை வலியும் எனக்கே வரட்டும். ஈழத்தமிழருக்கு வேதனைதருவதாக இருக்க வேண்டாம் என அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications